சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பக்கூடாது என்ற மனுவில் 40,000 பேர் கையொப்பம்!

breaking

அவுஸ்திரேலிய அதிகாரிகளால் மெல்பேர்ன் குடிவரவு துறை தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் குடும்பத்தை தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கவேண்டும் என அரசாங்கத்தை கோரும் மனுவில் 40,000ற்கும் அவுஸ்திரேலியர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

குறிப்பிட்ட தமிழ் குடும்பத்தவர்கள் வசித்துவந்த பகுதியை சேர்ந்த சமூக பணியாளர் ஏஞ்செலா பிரெட்ரிக்ஸ் மனுவில் கைச்சாத்திடும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இலங்கைக்கு சுயவிருப்பம் இன்றி நாடு கடத்தப்படும் தமிழர்கள் சித்திரவதை செய்யப்படுவதை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட குடும்பத்தை திருப்பி அனுப்புவதை இடைநிறுத்துமாறு உள்துறை அமைச்சரை கோரும் மனுவை அனுப்பும்; போராட்டத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் 40,000ற்கும் அதிகமானவர்கள் இந்த மனுவில் கைச்சாத்திட்டுள்ளனர். எங்கள் சமூகம் அவர்கள் நாடுகடத்தப்படுவதை அனுமதிக்காது இந்த குடும்பம் எங்களை விட்டு செல்வதை அனுமதிக்காது என பிரெட்ரிக் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இங்கு வாழவும் இந்த சமூகத்திற்கு பங்களிப்பு செய்யவும் விரும்பம் கொண்டவர்கள் அமைச்சர் டட்டன் அவர்களே அவர்களை மீண்டும் இங்கு திருப்பி அனுப்புங்கள் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.