வட்டுவாகல் கடற்படைமுகாம் காணி விடுவிக்கப்படுமா?

breaking

வட தமிழீழம் ,முல்லைத்தீவு- வட்டுவாகல் கோட்டபாய கடற்படைமுகாம் அமைந்துள்ள காணியில் ஒரு பகுதியை மக்க ளிடம் மீள கையளிக்க கடற்படை திட்டமிட்டு வருவதாக கடற்படை அதிகாரி ஒருவர் காணி உரிமையாளர் களுடன் நேற்று சினேகபூர்வமாக உரையாடியபோது கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வட்டுவாகல் பகுதியில் சுமார் 670 ஏக்கர் காணியை போருக்கு பின்னர் கடற்படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றனர். இந்த நிலத்தினை மீள வழங்குமாறு கோரி கடந்த மாதமும் காணி உரிமையாள ர்களும் அரசியல் தலைவர்களும் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தார்கள்.

இந்நிலையில் மேற்படி காணியில் சுமார் 200 ஏக்கர் காணியை மக்களிடம் மீள வழங்க கடற்படையினர் தீர் மானித்துள்ளதாக நேற்று முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள காணி உரிமையாளர்களுடன் சிநேகபூர்வமா க உரையாடிய கடற்படை அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இ

தேவேளை தம்முடைய காணியில் ஒரு துண்டை கூட கடற்படைக்கு வழங்கமாட்டோம். என காணி உரிமை யாளர்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.