பனிக்கன்குளம் அரசவீட்டுத்திட்ட பகுதியில் கலாச்சார சீரழிவு சம்பவங்கள்!!

breaking

பனிக்கன்குளம் அரசவீட்டுத்திட்டத்தில் பயனாளிகளை குடியமர்த்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடாத்தி இறுதி தீர்மானம் எடுப்பதாக பிரதேச அபிவிருத்தி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் கடந்த 2012 ம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அரச அதிகாரிகளுக்காக அமைக்கப்பட்ட 50 வீட்டுத்திட்டத்தில் இதுவரை அரச அதிகாரிகள் குடியேறாத காரணத்தால் குறித்த பகுதியில் பல்வேறு கலாச்சார சீரழிவு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது.

குறித்த பகுதியில் கடந்த 2012 ம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அரச அதிகாரிகளுக்காக காணிகள் துப்பரவு செய்து வழங்கி அதற்குள் அவர்களுக்கான வீடுகளை அமைப்பதற்க்காக ஒரு இலட்சம் ரூபா மானியமும் இரண்டு இலட்சம் ரூபா கடன் அடிப்படையிலும் வழங்கி அரச அதிகாரிகள் 5 0 பேர் தமக்கான வீடுகளை அமைத்தனர்.

குறித்த கிராம நிரந்தர வாசிகளின் தேவைகள் பூத்தி செய்யாத போதும் குறித்த வீட்டுத்திட்டத்துக்கு வடக்கின் வசந்தம் திட்டத்தில் மின்னிணைப்பு வசதிகள் யாவும் செய்து கொடுக்கப்பட்டு வீதிகள் அமைத்து கொடுக்கப்பட்டு குடிநீர் கிணறுகள் அமைத்து கொடுக்கப்பட்டும் பல்வேறு குறைபாடுகளை காரணம் காட்டி பல குடும்பங்கள் இங்கு குடியேறவில்லை ஒரு சில குடும்பங்கள் இங்கு குடியேறி குறிப்பிட்ட காலத்தில் அவர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

தற்போது குறித்த பகுதியில் யாருமற்ற நிலையில் அங்கு களவு மற்றும் சட்டவிரோத தொழில்கள் பலவும் பாலியல் ரீதியிலான கலாச்சார சீரழிவு சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதோடு இந்த பகுதியில் தொடர்ச்சியாக வீட்டு கூரைகள் கதவு நிலை யன்னல்கள் கலவாடப்பட்டும் வருகின்றனர்.

இடம்பெறும் குற்றச் செயல்களுக்கு பணிக்கன்குலத்தில் நிரந்தரமாக வாழும் இளைஞர்கள் சிலர் தொடர்ச்சியாக பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர் உரியவர்கள் குடியேறாததன் விளைவால் பலரும் துன்பப்படவேண்டி ஏற்ப்பட்டுள்ளதோடு பல்வேறு குற்றச்செயல்களுக்கு சந்தர்ப்பமாக அமைந்துள்ளதோடு வீடுகள் காடுகளால் சூழப்பட்டு வீட்டுக்குள் பாம்பு புற்றுகள் உருவாக்கி காணப்படுகிறது இங்கு மக்களை உடனடியாக மீள்குடியேற்றுமாறு பல தடவை பலரிடம் கூறியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை பல பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்கள் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களில் இந்த விடயம் பேசப்பட்டும் வெவ்வேறு காரணங்களால் தட்டிக்களிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (12) ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் இந்தவிடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது இங்கு வழமைபோன்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட பொது இதற்க்கு ஒரு இறுதி தீர்வு இன்றைய கூட்டத்தில் எட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைய அரசியல் பிரமுகர்கள் வீட்டுத்திட்ட உரிமையாளர்கள் அனைவரையும் குறித்த கிராமத்தில் வருகிற மாதம் (ஏப்ரல் )முதல் வாரத்தில் கலந்துரையாடி ஒரு முடிவு எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் குறித்த பகுதியில் வீடுகளை அமைத்தவர்கள் மீண்டும் ஒருமுறை வேறு இடத்தில் வீடுகளை பெற்று அங்கு வாழ்வதாலேயே இங்கு குடியேறவில்லை எனவும் மாவட்ட செயலகமே அரச அதிகாரிகளுக்கு இரண்டு இடங்களிலும் வீடுகளை வழங்கியது எனவே இதற்க்கு உரிய நடவடிக்கை எடுத்து இங்கு மக்களை குடியமர்த்த வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டது.