காணமல் போன மீனவர்களை தேடம் நடவடிக்கை தீவிரம்!

breaking

வட தமிழீழம், முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் தொழிலுக்கு சென்ற சிலாபத்தினை சேர்ந்த மூன்று மீனவர்கள் இதுவரை திரும்பி வரவில்லை என மீனவர்களால் தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது 12.03.18 அன்று அதிகாலை முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் இருந்து மூன்று மீனவர்கள் ஒரு படகில் தொழில் நடவடிக்கைக்கு சென்றுள்ளார்கள் .

சிலாபத்தினை சேர்ந்த 51 அகவையுடைய மில்ராஜ் மிரண்டா, 48 அகவையுடைய இமானுவேல் மிரண்டா,24 அகவையுடைய மிதுறதன் மிரண்டா ஒரோ குடும்பத்தினை சேர்ந்த தந்தை மகன் மற்றும் தம்பி ஆகிய மூவரும் ஒரு படகில் தொழிலிற்காக சென்றுள்ளார்கள்.

 

இவர்கள் நேற்று (12) நண்பகல் வேளை கரை திரும்புவதாக தெரிவித்துள்ளபோதும் கரை திரும்பாத நிலையில் மீனவர்களை காணவில்லை என நாயாற்று பகுதியினை சேர்ந்த மீனவ படகுகள் காணாமல் போன மீனவரின் படகினை தேடியும் இதுவரை கண்டுபிடிக்காத நிலையில்.தொடர்ந்தும் தேடுதல் நடைபெற்ற போதும் இதுவரை எந்த சாதகமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை.

இந்த மீனவர்களின் படகு இயற்திராம் 40 குதிரைவலுக்கொண்டது என்றும் நேற்றைய நாள் அதிகமான கடல் அடி காரணமாக படகு கடலில் மூழ்கி இருக்கலாம் என்றும் இன்னிலையில் இன்று காலை எரிபொருள் நிரப்பும் கான் ஒன்று குறித்த பகுதிக்கு கரை ஒதுங்கியுள்ளதையும் நாயாற்று வாடியில் உள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அத்தோடு காணாமல் போன மீனவர்களை தேடுவதற்கு கடற்ப்படைக்கு தகவல் வழங்கியும் அவர்கள் அக்கறையாக செயற்ப்படவில்லை என்றும் கடல் அடிகாரனமாக நேற்று கடலுக்கு சென்று தேடமுடியாத நிலை கானாப்பட்டதாகவும் இன்று தம்மால் முடிந்தளவு தேடியும் எந்த ஒரு தடயத்தையும் காணவில்லை எனவும் கடற்ப்படை மற்றும் அரசு அக்கறையீனமாக செயற்ப்படுவதாகவும் குற்றஞ் சாட்டியுள்ளனர் அத்தோடு பொலிசாருக்கு நேற்று முறையிட்டும் இன்று காலை தான் வருகைதந்து விசாரித்து சென்றதாகவும் அரசு அக்கறை செலுத்து கடற்ப்படையினை கொண்டு மீனவர்களை தேடித்தர உதவுமாறு கோரியிருந்தனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊடாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மூலம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு மீனவர்களை தேட விமானப்படையின் உதவியை கோரியிருந்தார்.

இதேவேளை கடற்படையும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை முதல் கடற்ப்படை டோரா படகுகள் பொலிசார் இராணுவம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு மீனவர்கள் என பலரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன விமானப்படை விமானமும் இன்னும் சிறிது நேரத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.