எங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

breaking

எங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்பது தெரியும் வரையில் எத்தனை வருடங்களானாலும் பரவாயில்லை. வீதியில் கிடந்து எங்களுடைய போராட்டம் ந டத்துவோம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கூறியுள்ளனர்.

கடந்த 364 நாட்களாக மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக தமது உறவுகளை தேடி போராட்டம் நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று ஊடகங்களுக்கு கண்ணீர்மல்க தங்க ள் நிலையை கூறும்போதே மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்கள்;.

இதில் அ.புஷ்பராணி என்ற தாய் கூறுகையில், இன்றுடன் 364 நாட்கள் தொடர்ச்சியாக போராடிவருகிறோம். எங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கே இருக்கிறார்க ள்? என்பது எங்களுக்கு சொல்லப்படவேண்டும். அதற்காகவே ஒரு வருடமாக வீதியில் கிடந்து போராடி

க் கொண்டிருக்கிறோம். மழையிலும், வெயிலிலும் இருக்கும் எங்களை ஆறுதல்படுத்த கூட இந்த அரச hங்கத்தினால் இயலவில்லை. அதனால் எங்களுக்கு கவலையும் இல்லை. இன்னும் எத்தனை வருடங்களானாலும் பரவாயில்லை. எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது? அவர்கள்

எங்கிருக்கிறார்க ள்? என்பது தெரியும் வரை நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம். நாளை(இன்று) எங்களுடைய போர hட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைகிறது. இந்த நாளிலாவது எங்களுடைய குரல் ஐ.நா வுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் கேட்கவேண்டும். அதற்காக

நாளை காலை போராட்டம் நடத்துகிறோம். இந்த போராட்டத்திற்கு மக்கள் ஒத்துழைப்கவேண்டும் என கண்ணீர்மல்க கூறினார். தொடர்ந்து ஆர்.சாந்தமேரி என்ற தாய் கூறுகையில், 2017ம் ஆண்டு பங்குனி மாதம் 15ம் திகதி எங்களு டைய உறவுகளை தேடி மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக

போராட்டத்தை ஆரம்பித்தோம். இ ன்றளவும் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. ஏன் இருக்கிறீர்கள்? என கேட்பதற்கும் கூட ஆள் இல்லாத நிலையில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த ஒரு வருடத்தில் வார்த்தைகளால் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்திருக்கிறோம்.

அத்தனையும் காணாமல் ஆக்கப்பட்ட எங்களு டைய உறவினர்களை மீட்பதற்கே. என்னுடைய மகன் 17 வயதில் காணாமல்போனார். இப்போது அவரு க்கு 24 வயதாக இருக்கும். என்னுடைய பிள்ளை உயிருடன் இருக்கிறது. என்னுடைய பிள்ளை எங்கே

இருக்கிறது? என்ன செய்கிறது? என்பது எனக்கு கூறப்படவேண்டும். என கூறி கண்ணீர் சிந்தினார்.