ஒழுங்கமில்லாத ஶ்ரீலங்கா காவல்துறை அதிகாரிக்கு எதிராக காவல்துறை ஆணைக்குழுவில் புகார்

breaking
  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தின் விசாரணை ஒன்றிற்கு அழைக்கப்பட்டு ஒத்துழைப்பு வழங்காமை மற்றும் ஒழுக்கம் தொடர்பாக கருத்திற்கொண்டு செயற்படாமையை கண்டறிந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா அலுவலகம் வவுனியா பதில் தலைமை காவல்துறை பொறுப்பதிகாரிக்கு எதிராக காவல்துறை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளது. என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர். எல். வசந்தராஜா தெரிவித்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் வவுனியாவிலிருந்து இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவரும் புசல்லாவை சென்று சட்டபூர்வமாக காதல் திருமணம் செய்து கொண்டனர். இவ்விடயங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த யுவதி கடத்தி செல்லப்பட்டுள்ளதாக முறையற்ற விதத்தில் வழக்குத்தாக்கல் செய்த வவுனியா பதில் தலைமை காவல்துறை பொறுப்பதிகாரியை நேற்றைய தினம் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு விளக்கமளிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு சென்ற பதில் தலைமை காவல்துறை பொறுப்பதிகாரி விசாரணைக்கு முகம் கொடுக்காமலும் , ஒழுக்கம் தொடர்பான விடயங்களையும் பின்பற்ற தவறியமையை கண்டறிந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா அலுவலகம் அவருக்கு எதிராக காவல்துறை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக வவுனியா அலுவலகத்தின் விசாரணை அதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர். எல். வசந்தராஜா மேலும் தெரிவித்துள்ளார்.