கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஒழுங்குகள் பூர்த்தி

breaking
  வடதமிழீழம்: கச்­ச­தீவு புனித அந்­தோ­னி­யார் ஆலய திரு­விழா இந்த வரு­டம் மார்ச் மாதம் 16ஆம் திகதி நடத்­து­வ­தற்கு ஒழுங்­கு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. ஆலய பங்­குத்­தந்தை, யாழ்ப்­பா­ணம் மாவட்­டச் செய­ல­கம், நெடுந்­தீவு பிர­தேச செய­ல­கம், பிர­தேச சபை மற்­றும் பல்­வேறு அரச நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து இலங்கை கடற்­ப­டை­யி­ன­ரின் பங்­க­ளிப்­பு­டன் திரு­வி­ழாவை நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இந்த வரு­டம் ஶ்ரீலங்கா, தமிழீழ பிர­தே­சங்­க­ளில் இருந்­தும் மற்­றும் இந்­தி­யா­வில் இருந்­தும் ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் கலந்து கொள்­வார்­கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. எதிர்­வ­ரும் 16ஆம் திகதி கச்­ச­தீ­வில் நடை­பெ­றும் திரு­வி­ழா­வில் பங்­கு­பற்­றச் செல்­லும் யாத்­தி­ரி­கர்­கள் திரு­வி­ழா­வுக்கு முதல் நாள் 15ஆம் திகதி காலை கச்­ச­தீவு சென்று இரவு தங்­கி­யி­ருந்து மறு­நாள் திருப்­ப­லி­யில் கலந்­து­கொள்ள ஆவண செய்­யப்­பட்­டுள்­ளது. யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான பஸ் போக்­கு­வ­ரத்து வசதி யாழ் பேருந்து நிலை­யத்­தில் இருந்து குறிக்­காட்­டு­வான் வரை 15ஆம் திகதி காலை 3.30 மணி­யி­லி­ருந்து செயற்­ப­டுத்­தப்­ப­டும். பட­குப்­போக்­கு­வ­ரத்து வசதி குறிக்­கட்­டு­வா­னில் காலை 4.30 மணி­யி­லி­ருந்து பகல் 10.30 மணி­வரை செயற்­ப­டுத்­தப்­ப­டும். யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான ஒரு­வ­ழிப் பட­குக் கட்­ட­ண­மாக குறிக்­காட்­டு­வா­னில் இருந்து கச்­ச­தீ­வுக்கு 325 ரூபா­வும், நெடுந்­தீ­வில் இருந்து கச்­ச­தீ­வுக்கு 225 ரூபா­வும் அற­வி­டத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான உண­வு­வ­சதி ஶ்ரீலங்கா கடற்­ப­டை­யி­ன­ரால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. மேலும் பல­நோக்கு கூட்­டு­ற­வுச் சங்­கம் மற்­றும் தனி­யார் கடை­கள் ஆகி­யன இயங்­கு­வ­தற்­கும் ஏற்­பா­டு­செய்­யப்­பட்­டுள்­ளது.