வேட்பாளருக்கும் வேட்பாளருக்கும் சண்டை .?

breaking
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் யார் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். மாநில செய்தி தொடர்பாளர் ஜோதிமணி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்டீபன் பாபு உள்ளிட்ட சிலர் காங்கிரஸ் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர். இன்றும் விருப்ப மனு வாங்கப்படுகிறது. கரூரில் காங்கிரஸ் கட்சியில் பொருத்தவரை கோஷ்டிப் பூசல் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் கரூரில் மாவட்ட தலைவராக இருந்த பேங்க் சுப்பிரமணியனை நீக்கிவிட்டு மாவட்ட தலைவராக சின்னசாமி நியமிக்கப்பட்ட பின் பயங்கரமாகவே கோஷ்டி பூசல் இருக்கிறது. பல இடங்களில் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து வந்தனர். தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் தேதி அறிவிப்புக்கு பின்பு அந்த கோஷ்டி பூசல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள ஒரு அரங்கில் பேங்க் சுப்பிரமணியனின் ஆதரவாளர்கள் திடீரென ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது கரூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்த ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்தும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனில் பேங்க் சுப்பிரமணியனை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். சமூக வலைதளங்களில் கரூர் வேட்பாளர் பேங்க சுப்ரமணியனை வெற்றிபெற வையுங்கள் பதிவுகள் போட அது களைகட்ட ஆரம்பித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசாமியின் ஆதரவாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் பேசும்போது கரூர் தொகுதி காங்கரஸ் கோட்டையாக இருந்து வந்தது தற்போது கரூர் மக்கள் செல்வாக்கு சரிந்து உள்ளது. இதன் காரணமாகவே நமது வெற்றி நீண்ட நாட்களாக தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தரப்பை சேர்ந்த மாநில அணி செயலாளர் மாநில விவசாய அணி செயலாளர் ஜெயபிரகாஷ் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணி தேர்வு செய்யக்கூடாது கடந்தகால நாடாளுமன்ற சட்டசபை தேர்தலில் அவர் தோல்வியை தழுவியுள்ளார். அதனால் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு சீட்டை வீணடிக்கக் கூடாது என்றார் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களோ ஜோதிமணியின் இளம் வயதிலிருந்தே 18 ஆண்டுகளாக எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைத்தார் . அவரால் மட்டுமே மக்களின் நன்மதிப்பை பெற முடியும் அதனால் காங்கிரஸ் தொகுதியில் அவர் போட்டியிட்டால் நல்லது என தெரிவித்து வருகின்றனர் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகலாம் என்ற நிலையில் வேட்பாளரை அறிவிக்கும் முன்பே கரூர் தொகுதியில் யாரை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றி அதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் பகிரங்கமாக பிடித்துள்ளது. இந்த கோஷ்டி பூசலை கண்டு திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல்காந்தி தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் தமிழகத்தில் சிபாரிசு செய்த ஒரே நாடாளுமன்ற சீட்டு கரூர் ஜோதிமணிக்கு தான் என்பது குறிப்பிடதக்கது.