பிறப்பு சான்றிதழுடன் அடையாள அட்டை இலக்கமும் அறிமுகம்!

breaking
இனிவரும் காலங்களில் பிறப்பு சான்றிதழுடன் அடையாள அட்டை இலக்கமும் பதிவாகும் டியிட்டல் பதிவு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பதிவாளர் நாயக திணைக்களத்தின் மக்கள் உரிமை சர்வதேச தரம் எனும் அறிமுக நிகழ்வு இன்று 16.03.19 மாவட்டங்கள் தழுவியரீதியில் நடைபெற்றுள்ளன.
153 ஆண்டுகள் பழமைவாய்ந்த பதிவாளர் நாயக திணைக்களத்தின் சேவைகளை நவீனமயப்படுத்தல் திட்டம் நாடு தழுவியரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கோதீஸ்வரன் தலைமையில் காணிகள் பதிவுசெய்தல் ஒருநாள் சேவை மற்றும் தேசிய பிறப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 16.03.19 அன்று நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இனை தெரிவித்துள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.
பதிவாளர் நாயக திணைக்களத்தின் பதிவுகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பிறப்பு பதிவு 2019 ஆம் ஆண்டு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு அவர்களின் பிறப்பு பதிவு டியிட்டல் பிறப்பு சான்றிதழ் தான் வழங்கப்படவுள்ளது
அதன் ஊடாக பிறப்பு சான்றிதழில் அடையாள அட்டை இலக்கம் கூட குறிப்பிடப்படும் இப்பொழுது பிறந்த இந்த ஆண்டு குழந்தைகளுக்கும் பிறப்பு சான்றிதழில் அடையாள அட்டை இலக்கம் கூட குறிப்பிடப்படவுள்ளது அது மட்டுமல்ல பிறப்பு சான்றிதழினை வேறு தேவைகளுக்காக பயன்படுத்துகின்ற பொழுது மொழிபெயர்ப்பு தேவையாக இருக்கின்ற சந்தர்ப்பமும் இருக்கின்றன பிறப்பு சான்றிதழ்கள் இனிவரும் காலங்களில் மும்மொழிகளிலும் பிரசுரிக்கப்படுகின்றன நாட்டில் இருக்கின்ற இரு மொழி பேசுகின்ற மக்களுக்கும் அது பிரயோசனமாக அமையவுள்ளது.
இவ்வாறான நடவடிக்கை மூலம் மக்களின் தேவைகளையும் சிறப்பான சேவைகளையும் வழங்குவதற்கு பதிவாளர் திணைக்களம் முன்வந்துள்ளது என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்