சந்தில் சிந்து பாடும் இந்திய புலனாய்வு அதிகாரி .?

breaking
ஐ.நா.வில் இலங்கையின் எந்த அரசு எத்தகைய உறுதி அளித்தாலும் செயல்பாட்டில் இழுபறி தொடரும். ஆகவே தென்னாபிரிக்காவைப்போன்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்ககைளை உடன் முன்னெடுக்க வேண்டும். அத்துடன் நாட்டின் நலனுக்காக போர்க்குற்ற விசாரணை அவசியமாகுமென இந்திய இராணுவத்தின் ஓய்வு நிலை புலனாய்வு நிபுணர் கேணல் ஆர்.ஹரிகரன் இலங்கை ஊடகம் ஒன்றில்  தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, என்னைப் பொறுத்தவரை போர் குற்ற விசாரணை படையினர்; மட்டும் அல்லாது முன்னாள் போராளிகளையும் உட்படுத்த வேண்டும். அதற்குத் தயார் இல்லை என்றால் அமைக்கப்படும் உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழவில் அவர்களின்; வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அவர்கள் தங்களது குற்றங்களுக்காக வருந்தினால் பொதுமன்னிப்பு அளிக்கலாம். இது வெளிப்படையாகவே நடத்தப் படவேண்டியது என்று தெரிவித்துள்ளார் தமிழீழத்தில் இந்திய அரசு செய்த இனப்படுகொலையை பார்ப்போம்  2009 ம் ஆண்டு தமிழீழத்தில் இலட்சக்கணக்கான தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்து கொன்றொழித்த சிங்கள அரசுக்கு பக்கபலமாக இருந்தது இந்தியா 1987-1989 காலப்பகுதியில் அமைதிப்படை என்கிற பெயரில் தமிழீழ மண்ணையும் மக்களையும் நாசமாக்கிய இந்திய ராணுவம் செய்த இனபப்டுகொலைக்கு சர்வேதேச விசாரணை என்று கிடைக்கும் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் 22 ஆம் திகதிகளில் வட தமிழீழம் யாழ்.போதனா வைத்திய சாலை மீது இந்திய அமைதி காக்கும் படை மேற்கொண்ட தாக்குதலில் வைத்திய சாலையில் கடமையாற்றிக்கொண்டிருந்த 21 வைத்தியர்கள் தாதியர்கள், வைத்திய சாலை பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளடங்கலாக 68 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர் . இந்திய அமைதி படை என எம் மண்ணுக்கு வந்து எத்தனை ஈழத்து இளைஞர் யுவதிகளை சிதைத்து கொன்றார்கள் அது  இனபப்டுகொலை இல்லையா ? கேணல் ஆர்.ஹரிகரன்  அவர்களே இனப்படுகொலை மற்றும் போர்குற்ற விசாரணை  இலங்கைக்கு  உடனே  முன்னெடுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லுவது வரவேற்கத்தக்கது அதே சமயம் இந்திய இராணுவமும் மற்றும் அதன் புலனாய்வு கட்டமைப்பும்  தமிழர்களுக்கு   நிகழ்த்திய இனப்படுகொலையை சர்வதேசத்திடம் மூடி மறைப்பது தான் சந்தில் சிந்து  பாடுவது   .