சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது மீண்டும் தாக்குதல்!- வாகன தொடரணியில் புகுந்து வெடித்துச் சிதறிய கார்

breaking
ம்மு - காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் கான்வாயில் மீண்டும் ஒரு கார் புகுந்து வெடித்தது.இன்று காலை10.30 மணியளவில் ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ரம்பன் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சான்ட்ரோ காரில் வெடிபொருள்களை நிரப்பி கான்வாயுக்குள் புகுந்து வெடிக்கச் செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. காருக்குள் யூரியா பாட்டில், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போன்றவையும் இருந்துள்ளன. இதுகுறித்து சி.ஆர்.பி.எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், `இன்று காலை 10.30 மணியளவில் பானிகல் பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற கான்வாயில் தனியார் கார் புகுந்து வெடித்தது. இதில், கான்வாயின் பின்புறத்தில் வந்த சி.ஆர்.பி.எஃப் வாகனம் ஒன்று சேதமடைந்தது. சம்பவத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, இந்தியா -பாகிஸ்தானின் பால்கோட் பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை அழித்தது. புல்வாமா தாக்குதலைப் போலவே ஜம்மு - காஷ்மீரில் மற்றொரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.