டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடங்கள் நடாத்திய கலைநிகழ்வு!

breaking

டென்மார்க்கிலுள்ள மாலதி தமிழ்க் கலைக்கூடங்கள் அனைத்தும் இணைந்து நடாத்திய கலைநிகழ்வு 06-04-2019 அன்று மிகவும் சிறப்பாக Herning நகரில் நடைபெற்றது.

இக்கலைநிகழ்வானது வழமையான நிகழ்வுகளான மங்கல விளக்கேற்றல், ஈகச்சுடரேற்றல், அகவணக்கம் போன்றவற்றுடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.

இக்கலைநிகழ்வில் கவிதைகள், நாடகங்கள், பரதநாட்டியங்கள், எழுச்சி நடனங்கள், உரை போன்ற பல நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்றன. இந்நிகழ்வுகள் அனைத்தையும் மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்கள் மிகமிக ஆர்வமாகவும் சிறப்பாகவும் வழங்கியிருந்தார்கள்.

இக்கலைநிகழ்வின் சிறப்பு நிகழ்வாக தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களில் 'தமிழ் இலக்கியப் பட்டயம்" பெற்ற ஆசிரியர்களுக்கு மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் தலைமை நிர்வாகத்தினால் மதிப்பளிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு தமிழ்மொழியில் பன்னிரண்டாம் வகுப்பை நிறைவுசெய்த மாணவர்களையும் மாலதி தமிழ்க் கலைக்கூடம் பாராட்டி மதிப்பளித்தது.

கலைப்பாட ஆற்றுகைத்தேர்வில் சித்தியடைந்த மாணவர்களுக்கு 'கலைமணி" என்ற பட்டம் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. அத்துடன் டென்மார்க்கில் நீண்ட காலமாக கலைப்பணி ஆற்றிவரும் கலை ஆசிரியர்களைப் பாராட்டி அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் மதிப்பளித்தது.

தொடர்ந்து நிகழ்ச்சிகளை வழங்கிய மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் இசைக்கவிடப்பட்டதுடன், கலைநிகழ்வு இனிதே நிறைவடைந்தது.