தலைதெறிக்க ஓடி வருகிறாராம் கோட்டா!

breaking

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலா் கோட்டாபாய ராஜபக்ஸவுக்கு எதிராக அமொிக்க நீதிமன்றில் இரு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், எழுத்துமூல அறிவிப்புக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கோட்டாபாய ராஜபக்ஸ கடுமையான நெருக்கடியை எதிா்கொண்டுள்ளாா்.

முத­லா­வது வழக்கை இலங்­கை­யில் சுட்­டுப் படு­கொலை செய்­யப்­பட்ட பிர­பல ஊட­க­வி­ய­லா­ளர் லசந்த விக்கிர­ம­துங்­க­ வின் மகள் அசிம்சா விக்­கி­ர­ம­துங்க தாக்­கல் செய்­துள்­ளார். இரண்­டா­வது வழக்கை இலங்கையில் சி்த்திர­வ­தை­யால் பாதிக்­கப்­பட்ட தமி­ழர் ஒரு­வ­ரின் சார்­பில் அனைத்­து­லக உண்­மைக்­கும் நீதிக்­கு­மான திட்­டம் என்ற மனித உரிமை அமைப்பு தாக்­கல் செய்­துள்­ளது. தமது தந்­தை­யின் படு­கொ­லைக்­குக் கார­ண­மா­ன­வர் என்ற அடிப்­ப­டை­யில் கலி­போர்­னி­யா­வில் உள்ள நீதி­மன்­றத்­தில் அசிம்சா விக்­கி­ர­ம­துங்க தாக்­கல் செய்­துள்ள சிவில் பாதிப்பு வழக்­குத் தொடர்­பாக நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யாக வேண்­டும் என்று கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. கலி­போர்­னி­யா­வில் உள்ள அமெ­ரிக்­கப் பல்­பொ­ருள் அங்காடி வளா­ளத்­தில் உள்ள வணிக நிலை­யம் ஒன்­றின் வாக­னத் தரிப்­பி­டத்­தில் நேற்­று­ முன்­தி­னம் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு கோத்­த­பா­ய­வி­டம் இந்த வழக்­குத் தொடர்­பான அறி­வித்­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை, படை­யி­ன­ரின் சித்­தி­ர­வ­தை­க­ளால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வ­ரின் சார்­பில், யஸ்­மின் சூகா தலை­மை­யி­லான அனைத்­து­லக உண்­மைக்­கும் நீதிக்­கு­மான திட்­டம், அமெ­ரிக்க சட்ட நிறு­வ­னம் ஒன்­று­ர­டன் இணைந்து மற்­றொரு வழக்கை கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­துள்­ளது. இந்த சிவில் பாதிப்பு வழக்­குத் தொடர்­பா­க­வும் கோத்­த­பா­ய­வுக்கு நேற்­று­முன்­தி­னம் அறி­வித்­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

சித்­தி­ர­வ­தை­க­ளால் பாதிக்­கப்­பட்ட அந்­தத் தமி­ழர், கோத்­த­பாய ராஜ­பக்­ச­வி­டம், இழப்­பீடு கோரி இந்த வழக்கைத் தாக்­கல் செய்­துள்­ளார். கன­டா­வில் வசிக்­கும் இவர், 2007ஆம் ஆண்டு கொழும்­பில் கைது­செய்யப்பட்டு உடல் ரீதி­யா­க­வும், உள ரீதி­யா­க­வும் கடு­மை­யாக சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டி­ருந்­தார்.

2010ஆம் ஆண்டு இவர் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்­தார். திரு­ம­ணம் ஒன்­றில் பங்­கேற்­ப­தற்­காக அமெ­ரிக்கா சென்­றி­ருந்த கோத்­த­பாய ராஜ­பக்ச அடுத்த சில நாள்­க­ளில் நாடு திரும்­ப­வி­ருந்­தார். இந்­நி­லை­யி­லேயே, அவருக்கு எதி­ராக, இரு­வேறு சட்ட நிறு­வ­னங்­க­ளால் வழக்­கு­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்த வழக்­கு­க­ளால் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் அமெ­ரிக்க குடி­யு­ரிமை துறப்பு செயற்­பா­டு­க­ளில் பெரும் நெருக்­கடி ஏற்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதே­வேளை, அரச தலை­வர் வேட்­பா­ள­ராக களமிறங்கவுள்ள கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்­பின் ஆத­ர­வா­ளர்­களே இதன் பின்­ன­ணி­யில் செயற்­பட்­டுள்­ள­னர் என மகிந்த அணி குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது.