Take a fresh look at your lifestyle.

மாணவர்களுக்கு இடையிலான முரண்பாடே! பாலியல் தொந்தரவு இல்லை! – துணைவேந்தர்

யாழ் பல்கலைக்கழத்தில் கடந்த 6ம் திகதி நடை பெற்ற புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் மாணவி ஒருவர் தாக்கப்பட்டதாக நாம் வெளியிட்ட செய்தி தவறானது எனவும் அவ்வாறன அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒண்றியம் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.

ஆனால் இன்று யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஷ்வரன் ஊடகங்களுக்கு செய்திக் குறிப்பு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் மாணவர்களுக்கு இடையிலான முரண்பாடு பற்றியதே என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நடைபெற்ற அன்று முதலாவதாக எமது இணையத்தளம்   https://bit.ly/2VAFNCz குறித்த செய்தியை மாணவி தாக்கப்படார் என்று செய்தி வெளியிட்டிருந்தது அதன் பின் யாழில் இயங்கி வரும் அச்சு ஊடகங்களும் சிறிலங்கா அரசின் கீழ் பதிவுசெய்யப்பட்ட இணையத்தள ஊடகங்களும் அந்த வரவேற்பு நிகழ்வில் பாலியல் சீண்டல்கள் நடைபெற்றதாக திரிவுபடுத்தி செய்திகளை வெளியிட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஷ்வரன் ஊடகங்களுக்கு செய்திக் குறிப்பு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதன் முழு விவரமும் வருமாறு :

ஊடக அறிக்கை

06.04.2019 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக 07.04.2019 அன்று ஊடகங்களில் வெளியான தகவல்கள் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் தெளிவுப்படுத்தக் கடமைப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான குறித்த விடயம் தொடர்பான தகவல்கள் பாலியல் தொந்தரவு பற்றியது என்பது உண்மைக்குப் புறம்பானது. குறித்த சம்பவம் மாணவர்களுக்கு இடையிலான முரண்பாடு பற்றியதே என்பதையும் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதையும் பல்கலைக்கழக நிர்வாகம் தெளிவுப்படுத்துகின்றது.

-துணைவேந்தர்-