இறுதிப் பங்குனி திங்கள் , திருடர்கள் காட்டில் மழை: 20 பவுண் நகை மாயம்

breaking
  பங்­கு­னித் திங்­கள் இறு­தி­நா­ளான நேற்று முன்­தி­னம் பன்­றித்­த­லைச்சி அம்­மன் ஆல­யத்­துக்கு வந்த பக்தர்­க­ளி­டம் திரு­டர்­கள் தமது கைவ­ரி­யைக் காட்­டி­யுள்ளனர். சுமார் 20 பவுண் தங்­க­ந­கை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன. பங்­கு­னித் திங்­கள் இறு­தி­நாள் வழி­பாடு பன்­றித் தலைச்சி அம்­மன் ஆல­யத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது. அதில் பெரு­ம­ள­வான பக்­தர்­கள் கலந்து கொண்­ட­னர். அங்கு வந்த பக்­தர்­க­ளில் 8 பேர் தமது தங்க நகை­க­ளைப் பறி­கொ­டுத்­துள்­ள­னர். 6 பேரி­டம் விலை­யு­யர்ந்த அலை­பே­சி­கள் திரு­டப்­பட்­டுள்­ளன. இவற்­றை­விட சிலர் தீர்த்­தக் கேணி­யோ­ரம் வைத்து விட்டு குளிக்­கச் சென்ற சம­யம் பய­ணப் பைக­ளும் திரு­டப்­பட்­டுள்­ளன. ஆல­யத்­துக்கு வழி­பாட்­டுக்கு வரும் பக்­தர்­கள் தங்க நகை­கள் அணி­வ­தை­யும், விலை­யு­யர்ந்த பொருள்­க­ளைக் கொண்­டு­வ­ரு­தை­யும் தவிர்க்க வேண்­டும் என்று ஆல­யத்­தி­னர் ஆரம்­பம் முதலே அறி­வு­றுத்தி வந்­த­னர். மக்­கள் அவ­தா­ன­மாக இருக்க வேண்­டும் என்­றும் தொடர்ச்­சி­யாக அறி­வித்து வந்­த­னர். இருந்­த­போ­தி­லும் நகை­க­ளும், பெறு­மதி மிக்­கப் பொருள்­கள் திரு­டப்­பட்­டுள்­ளன.