கடற்படைக்கு காணி பிடிப்பு ! மக்கள் எதிர்ப்பு

breaking

வடதமிழீழம்: யாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள கடற்படை முகாம் காணியை நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்கத்துடன், இன்று காலை 9 மணிக்கு நிலஅளவைத் திணைக்களம் அளவீடு செய்யவுள்ளது.

எனினும், இந்த அளவீட்டை நடத்த விடாமல் எதிர்ப்பு தெரிவிக்க இன்று காலையிலேயே மணடைதீவு கடற்படை முகாமிற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை மக்கள் மேற்கொள்ளவுள்ளனர்.

மண்டைதீவில் உள்ள கடற்படை தளம், 18 ஏக்கர் தனியார் காணிகளையும் சுவீகரித்து அமைக்கப்பட்டுள்ளது. அந்த காணிகளிலேயே மண்டைதீவின் குடிநீர் கிணறுகளும் வளமான நிலமும் அமைந்துள்ளன. அவற்றை நிரந்தரமாக சுவீகரிப்பதற்காக, காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று நடக்கவுள்ளன.

இந்த சுவீகரிப்பு நடவடிக்கைளை நிறுத்தும்படி ஶ்ரீலங்கா ஜனாதிபதி, பிரதமரிடம் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், அந்த கோரிக்கை கணக்கிலெடுக்கப்படாமல் இன்று அளவீட்டு பணிகள் நடக்கிறது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் காணி சுவீகரிப்பிற்கு எதிரான தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும், மேலிட உத்தரவில்லாமல் அளவீட்டு பணிகளை நிறுத்த முடியாதென, நிலஅளவை திணைக்களத்தின் யாழ் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

பேரினவாத சிங்களத்தை விளங்கிக்கொள்ளாமலா அல்லது தமிழ் மக்களை தாங்கள் ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கையிலா தமிழ் தலைமைகள் தொடர்ந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்