முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை பல்வேறு குறைகளுடன்!

breaking
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படும் சேவைகளை சீர்செய்ய மக்கள் சுகாதார அமைச்சு உள்ளிட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இது தொடர்பில் இன்று 11.04.19 அன்று மாவட்ட மருத்துவ மனைக்கு முன்பாக முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தி மனுக்களை கையளித்துள்ளார்கள் அந்த மனுவில்.
முல்லைத்தீவு மாவட்ட மக்களாகிய நாங்கள் எங்கள் வைத்தியசாலையின் மேம்பாடு கருதி தாங்களின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.
போரினாலும் சுனாமி அனர்த்தத்தினாலும் மேசமாக பாதிக்கப்பட்ட நாங்கள் எமது வைத்திய சேவைகளுகாக இந்த மாவட்ட மருத்துவு மனையையே நம்பி இருக்கின்றோம்.
போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த வைத்தியசாலையில் இருந்து திருப்திகரமான வைத்திய சேவையினை பெறமுடியவில்லை என்பது துரஸ்டவசமான ஒன்று போதிய வைத்தியர்கள் இல்லை,ஏனை ஆளணிகள் போதியளவு இல்லை வைத்தியர்கள் உள்ளிட்ட ஆளணியினரின் சீரான சேவையினை நடைமுறைப்படுத்துவதில் உள்ள அசமந்தபோக்கு நோயாளர் நலன் தொடர்பில் கரிசனை இல்லாமை பௌதீக வளப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் மக்களாகிய எங்களது சிகிச்சை பெறுவதற்கான அடிப்படை உரிமை மறுக்கப்படுகின்றது.
அதிகளவில் வறுமை மக்களை கொண்ட எங்கள் மாவட்டத்திற்கே உண்மையில் சிறந்த வைத்தியசேவை அத்தியவசிமாகின்றது இலங்கையில் எந்த ஒரு மாவட்ட மருத்துவமனைக்கும் நிகரான சேவையினை வழங்ககூடிய வகையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையும் தொழில்படவேண்டும் என்பது எமது அவா.
ஆனால் இன்றுவரை இவ்வாறு நடைபெறாதிருப்பது வேதைனைக்குரிய விடையம் இது மட்டுமின்றி வைத்தியர்களால் மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தத்தை மக்களாகிய எங்களின் உயிருடன் விளையாடும் செயலாகவே நாங்கள் பாக்கின்றோம்.
எனவே பொதுமக்களாகிய நாங்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம் இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என நம்புகின்றோம்.
வைத்தியசாலையில் உரிய ஆளணியினை பூர்த்திசெய்தல்.
வைத்தியசாலைக்கு தேவையான பௌதீக வளங்களை வழங்குதல்.
வைத்தியர்களுக்கும் ஏனைய ஆளணியினருக்கும் உரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்.
நோயாளர்கள் உரிய சிகிச்சை பெறுவதை உறுதிப்படுத்தல்.
நோயாளர்கள் தகுந்த காரணம் இன்றி வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதை நிறுத்தல்.
வைத்தியர்கள் தங்கள் கடமைநேரத்தில் வைத்தியாசலையில் இருப்பதையும் சிறந்த சிறந்த கடமையாற்றுவதையும் உறுதிப்படுத்துதல்.
செவ்வென கடமைபுரியும் வைத்தியர்களுக்கும் ஏனைய வைத்தியர்களாவும் பணியாளர்களாலும் இடையூறு ஏற்படாது இருப்பதை உறுதிப்படுத்துதல்.
வைத்தியசாலையின் செயற்பாட்டறைகள் உரிய இடத்தில் இருத்தலை உறுதிப்படுத்தல் (உதாரணமாக அவசரசிகிச்சை பிரிவு பொருத்தமற்ற இடத்தில் இருத்தல்).
செயற்படாது இருக்கும் தீவிர சிகிச்சைப்பிரிவை உடன் செயற்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
நோயாளர்களுக்கான சிகிச்சையின் போது அதற்கான வைத்திய நிபுணர்கள் உட்பட அனைத்து ஆளணியினரும் நேரடியாக பங்கெடுப்பதை உறுதிப்படுத்தல்.
நோயாளர் சிகிச்சையினை தொலைபேசி ஊடாகவோ அல்லது வேறு சாதனங்கள் ஊடாகவோ வழிநடத்தலை தவிர்த்தல்.
வைத்தியர்கள் புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கான வழிவகைகளை தவிர்த்தல்.
மாவட்ட பொது மருத்துவமனையின் விதிமுறைகளுக்கு அமைய வெளிநோயாளர் பிரிவில் என்நேரமும் வைத்தியர் ஒருவராவது கடமையில் இருத்தலை உறுதிப்படுத்தல்
போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவினை சுகாதார அமைச்சர்,வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்,வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,
முல்லைத்தீவ மாவட்ட பிராந்திய சுகாதரசேவைகள் பணிப்பாளர்,முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.