வாக்காளர்களுக்கு ரூ 2 ஆயிரம் பணம் கொடுக்கும் மோடி?

breaking

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு செல்ல இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பிரதமர் நிதி என்ற பெயரில் ரூ 2 ஆயிரம் வாக்காளர்களின் வங்கி கணக்குககளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் நேரத்தில்  வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவுகள் ஆளுங்கட்சிக்கு மட்டும் பொருந்தாதாம். அதனால் தான் தேர்தல் ஆணையம் கமுக்கமாக உள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர்களின் வங்கி கணக்கில திடீரென ரூ 2 ஆயிரம் ஏற்றப்பட்டுள்ளதாக செல்போன்களுக்கு குறுஞ்சேதி வருவதால் மக்கள் சந்தோசமடைந்துள்ளனர். இதைப் பார்த்த பலர் தங்களுக்கு குறுஞ்செய்தி வரவில்லை என்று வங்கிக்கே சென்று பணத்தை பெற்று வருகிறார்கள்.

இது குறித்து இளைஞர்கள் கூறும் போது

தேர்தல் நேரத்தில் அரசு நலத்திட்டங்களோ அல்லது பரிசுகளோ வாக்காளர்களுக்கு கொடுக்க கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. ஆனால் பாஜக அரசு ஏழைகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயாரம் கொடுப்பதாக சொன்னார்கள் அதுவும் தேர்தல் நேரத்தில் சொன்னார்கள் பிறகு தேர்தல்வந்ததால் நிறுத்தப்பட்டுள்ளது என்று வாய்மொழியாக சொன்னார்கள்.

ஆனால் தற்போது வாக்கு பதிவுக்கு சில நாட்கள் இருக்கும் போது வங்கி கணக்கில் பணம் போடுகிறார்கள். அதாவது அரசு கஜானாவை காலி செய்து பாஜகவுக்கு வாக்கு வாங்க இப்படி ஒரு திட்டம். இப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.