பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்!

breaking

பிரான்சில் தொடர்ச்சியாக 22ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த யெலோ வெட்ஸ் அமைப்பினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக, தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், யெலோ வெஸ்ட் அமைப்பினரின் போராட்டமானது, நேற்று(சனிக்கிழமை) 22ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது.

தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பொலிஸாருக்கும், ஆர்பாட்டகாரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தடியடி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

பிரான்சில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், ஜனநாயகத்தை உறுதிபடுத்துமாறும் வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.