பொது மக்களின் போராட்டங்களை படம் பிடிக்கும் புலனாய்வாளர்கள் திருடனை பிடித்தனர்

breaking
  வடதமிழீழம்: யாழ்ப்பாணம், வல்வெட்டிதுறைப் பகுதியில் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய நபர் ஒருவரை காவல்துறையினர் துரத்திப் பிடித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (13.04.2019) இரவு இடம்பெற்றது. வல்வெட்டித்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துச் சென்றதாக வல்வெட்டித்துறை காவல்துறை மூலம் காவல்துறை புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டது. இதனை அடுத்து துரிதமாக செயற்பட்ட புலனாய்வுப் பிரிவினர் மந்திகை - துன்னாலைக்கு இடைப்பட்ட அல்லையம்பதி பகுதியில் வைத்து சங்கிலியை அறுத்த வழிப்பறிக் கொள்ளையரை மடக்கிப் பிடித்து நெல்லியடி காவல்துறை நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தமிழீழ பகுதிகளில் அளவுக்கதிமாக குவிக்கப்பட்டுள்ள ஶ்ரீலங்கா காவல்துறையினர் உரிமைகளிற்காக போராடும் மக்களை படம் பிடிப்பதும் சமூக விரோத செயல்களிற்கு துணைபோவதுமே தமது முதன்மைப் பணியாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.