தமிழகத்தை நாசமாக்கும் பாஜக.! -அதிர்ச்சி தகவல்.!

breaking
நீட் மற்றும் சேலம் 8 வழி சாலை திட்டம் இரண்டிலும் தமிழக மக்களின் கோரிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டை பாஜக கட்சி எடுத்து இருக்கிறது. நீட் தேர்வும், சேலம் 8 வழி சாலை விவகாரமும் தமிழகத்தின் மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதில் சென்ற வாரம்தான் சேலம் 8 வழி சாலை வழக்கில் தீர்ப்பு வந்தது. பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையில் வந்த இந்த தீர்ப்பில், சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் கூறி உள்ளது. அதேபோல் நீட் தேர்விற்கு எதிராக காங்கிரஸ், திமுக இரண்டும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுத்து உள்ளது. ஆனால் பாஜக மட்டும் இரண்டிலும் எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. நீட் தேர்வு குறித்து பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் தனது பேட்டியில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் நீட் தேர்வு தேவையில்லை என்று கூறி வருகிறது. ஆனால் நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை. அதிமுக நீட் தேர்வை எதிர்க்கவில்லை. அதிமுக நீட் தேர்வை எதிர்த்தால் அவர்களை நாங்கள் சமாதானம் செய்வோம். அதிமுக எதிர்க்கும் பட்சத்தில் அவர்களிடம் நாங்கள் பேசுவோம், என்று குறிப்பிட்டு இருக்கிறார். நீட் மற்றும் 8 வழி சாலை திட்டம் இரண்டும் தமிழகத்தில் பெரிய பிரச்சனைகளை சந்தித்தது. ஆனால் இரண்டிலும் பாஜக தமிழக மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறது. எதிரான நிலைப்பாட்டை எடுத்ததோடு மட்டுமில்லாமல், கண்டிப்பாக இதை நிறைவேற்றியே தீருவோம் என்பதிலும் உறுதியாக இருக்கிறது. சேலம் 8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்பதிலும் பாஜக உறுதியாக உள்ளது. தமிழகத்தில் முக்கிய கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் பாஜகவின் இந்த நிலைப்பாடு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பாமக இந்த நீட் ஒழிப்பு கோரிக்கையுடன்தான் கூட்டணியே வைத்தது. அப்படி இருக்கும் போதே பாஜக இப்படி உறுதியான நிலைப்பாட்டுடன் தமிழக மக்களுக்கு எதிராக இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.