கமல்ஹாசன் மற்றொரு முகம் பா.ஜ.க முகமா.?

breaking
நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டும் தமிழகம் முன்னேறி விடுமா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று அவர் விருதுநகர் வேட்பாளர் முனுசாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். சாத்தூரில் பேசிய அவர் நீட் தேர்வு குறித்தும், அதில் திமுக எடுத்திருக்கும் எதிர்ப்பு நிலைப்பாடு குறித்தும் வெளிப்படையாக பேசினார். மல் தனது பிரச்சாரத்தில், சில கட்சியினர், நாங்கள்தான் நீட்டிக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தோம். அதனால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்கிறார்கள். அவர்கள் அப்படி வாக்கு கேட்பது நல்ல விஷயம்தான் . நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை டெல்லியில் இருந்து வந்து நீக்கி...எல்லாம் நடக்கட்டும் . ஆனால் இப்போது அதை ஏன் சொல்கிறீர்கள்?, அதை முன்பே சொல்லி இருக்கலாம் அல்லாவா? குழந்தை ஒன்று சாகும் முன்பே சொல்லி இருக்கலாமே. சரி கேட்கிறேன், நீங்கள் சொல்வது போல நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டும் தமிழகம் முன்னேறி விடுமா? உங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி நிட்டை எடுத்துவிட்டால் தமிழகம் முன்னேறிவிடுமா? அது மட்டுமா முக்கியம்.. படிக்கின்ற பிள்ளைக்கு நல்ல உணவு வேண்டாமா? நல்ல குடிநீர் வேண்டாமா?. அதை எல்லாம் இவர்கள் செய்ய மாட்டார்கள். அதை பற்றி பேச மாட்டார்கள் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருக்கிறார். தமிழகமே நீட் தேர்வை எதிர்த்து பேசி வருகிறது. ஆனால் கமல்ஹாசன் நீட் தேர்வு குறித்து இப்படி கருத்து சொல்லி இருப்பது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.