அப்பாவி தமிழ் இளைஞனை காவல்துறை அடித்து கொலை செய்த வழக்கு 29 ஆம் திகதி

breaking
  வடதமிழீழம்: சுன்னாகம் காவல் நிலையத்தில் சந்தேகநபரைத் தடுப்புகாவலில் வைத்து சித்திரவதை செய்த பின் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டு வழக்கில் சுன்னாக காவல் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார உள்ளிட்ட 5 காவல்துறையினருக்கும் எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் 29ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் ஆரம்பமாக உள்ளது. திருட்டு வழக்கொன்றில் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சிறிஸ்கந்தராஜா சுமணனை தடுப்பு காவலில் வைத்து தாக்கி கடும் காயம் ஏற்படுத்தியமை , கொலை செய்தமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் 10 சிவில் சாட்சிகள், 2 இராணுவ அதிகாரிகள் மற்றும் சட்ட மருத்து அதிகாரி உள்பட மொத்தம் 40 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த காவல்துறை பரிசோதகர் நிசாந்த டி சில்வாவும் சாட்சிப் பட்டியலில் உள்ளடங்குகின்றார். இந்த வழக்கை ஆரம்ப விசாரணைக்காக வரும் 29ஆம் நாள் திகதியிட்டுள்ள யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், அன்றைய தினம் எதிரிகள் ஐவரையும் மன்றில் முற்படுத்துமாறு அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கட்டளையிட்டுள்ளது.   சுமணனின் கொலையை போன்று எத்தனை ஆயிரம் அப்பாவி தமிழ் இளைஞர்கள் பேரினவாத சிங்களப் படைகளால் கொலை செய்யப்பட்டு கொலைகளும் மூடிமறைக்கப்பட்டுள்ளன தமிழீழத்திலும் ஶ்ரீலங்காவிலும்