ஒட்டுசுட்டானில் மக்கள் தேவைக்குரிய காணியில் படையினரின் சிற்றுண்டிசாலை!

breaking
முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு திசைகளுக்கும் செல்லும் சந்தியாக ஒட்டுசுட்டான் பிரதேசத் காண்படுகின்றது இந்த பிரதேசத்தில் இருந்து அதிகளவான மக்கள் வெளி பிரதேசங்களுக்கு சென்று வருகின்றார்கள்.
ஒட்டுசுட்டானில் இருந்து நெடுங்கேணி,மாங்குளம்,புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களுக்கு செல்லும் மையப்பகுதியில் பேருந்து தரிப்பிட நிலையம் ஒன்று இல்லாததால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றார்கள்.
இந்த பிரதேசத்தில் பேருந்து நிலையம் ஒன்று அமைப்பதற்கு இரண்டு ஆண்டுகள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டபோது அந்த நிதி திரும்பிசென்றுள்ளதாக பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்து நிலையத்திற்கான இடத்தினை ஒதுக்கி தரும்படி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்தும் அவர்களின் அசமந்தபோக்கினால் இவ்வாறான நிதி திரும்பும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள் சுமார் 3.5 மில்லியன் ரூபாய் இரண்டு ஆண்டுகள் திரும்பி சென்றுள்ளன.
ஒட்டுசுட்டான் சந்தியில் அமைந்துள்ள மக்கள் தேவைக்குரிய படையிரின் சிற்றுண்டி சாலை.
ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணியில் படையினர் சிற்றுண்டிசாலை அமைத்து வியாபாரம் செய்துவருகின்றார்கள் இந்த காணியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு பொருத்தமான இடமாக பரிந்துரைக்கப்பட்டும் காணியினை படையினரிடம் இருந்து பெற்றுக்கொள்ள பிரதேச செயலகம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை 2012 ஆம் ஆண்டின் மீள்குடியேற்றத்தின் பின்னர் குறித்த காணியினை படையினர் ஆட்சிசெய்துவருகின்றார்கள் இந்த காணிபகுதியில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் பிரதேச செயலாளரின் அசமந்தபோக்கினால் பேருந்து நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட பணம் திரும்பி சென்றுகொண்டிருக்கின்றன.
மக்கள் வீதிஓரங்களில் நின்றேபேருந்தில் ஏறிசெல்லவேண்டிய நிலையும் பேருந்துகள் வந்து தரித்து நிற்பதற்கு ஏற்றவசதிகள் இல்லாத நிலையில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் மக்கள் பேருந்து வசதியினை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை படையினர் வசமுள்ள குறித்த பொதுக்காணியினை பெற்று அந்த பகுதியில் பேருந்தி நிலையத்தினை அமைக்ச சம்மந்தப்ட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இது விடையம் குறித்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளரிடம் கேட்டபோது ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் பேருந்து நிலையம் ஒன்றுஅமைப்பதற்கு கூட்டுறவு சங்கத்தின் காணி சரியான இடமாக பாரிந்துரைக்கப்டப்டபோதும் பலகடிதங்கள் கொடுக்கப்பட்ட போதும் பிரதேச செயலகம் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி சென்றுள்ளன என்று தெரிவித்துள்ளர்.