தமிழர்களை பணபலத்தால் நசுக்கி அழிக்கும் நுண்நிதிகடன்!

breaking
ஸ்ரீலங்காவினை சேர்ந்த பணமுதலீட்டாளர்களின் நிறுவனங்களாக வடக்கு கிழக்கு பகுதியில் நுண்நிதி கடன் நிறுவனங்கள் செயற்பட்டுவருகின்றன இவ்வாறான நுண்நிதிகடன் களை எடுத்த வடக்கு கிழக்கினை சேர்ந்த பெண்கள் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டு தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் இது இன்றும் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பத்துபேருக்கு கடன்வழங்கப்பட்டால் அவர்களின் ஒருவரே கடனை முழுமையா செலுத்துகின்றார்கள் ஏனையவர்கள் தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வதற்காகவும்,ஆடம்பர வாழ்கையை வாழ்வதற்காகவும்,பெற்றுக்கொண்ட பணத்தினை பயன்படுத்துவதால் கடனையும் வட்டியையும் மீளசெலுத்த முடீயாத நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். வடக்கு கிழக்கில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களை இலக்காக கொண்டு அவர்கள் கடனை திருப்பிசெலுத்த முடியுமா என அறியாமல் ஏனை நிறுவனங்களுக்கிடையிலான போட்டித்தன்மை இலக்கினை அடையவேண்டும் என்று முனைப்புடன் கடனைவழங்குகின்றார்கள். இவ்வாறு கடனை பெற்ற பெண்கள் ஒரு கடனை செலுத்துவதற்காக மீண்டும் ஒரு கடனை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். வழங்கப்பட்ட கடனை மீளப்பெற்றுக்கொள்ள அடிக்கடி அவர்களின் வீடுகளுக்கு தொடர்சியாக சென்று அழுத்தம் கொடுத்தல் பாலியல் தொல்லை கொடுத்தல் தரக்குறைவாக பேசுதல் பேன்ற செயற்பாடுகள் காரணமாக மன அழுத்த்திற்கு உள்ளாகி பெரும்பாலானவர்கள் தற்கொலை முயற்சியினை மேற்கொள்கின்றார்கள். வடக்கு கிழக்கில் இவ்வாறான நுண்நிதி கடனால் 60 வரையான பெண்கள் தற்கொலை செய்துள்ளார்கள். இது இன்றும் மாற்றிஅமைக்கப்படாத நிலை வடக்கு கிழக்கு மாவட்டங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன இவற்றை சிங்கள அரசு ஒரு திட்டமிட்ட இன அழிப்பின் செயற்பாடாகவே கையாள்கின்றார்கள். இதனைவிட மீற்றர் வட்டியிலும் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவை அனைத்தும் ஒட்டுமொத்த தமிழர்களை பணபலத்தால் நசுக்கும் திட்டமிட்ட செயலாகவே நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.