மட்டக்களப்பில் விவசாயி 3 பிள்ளைகளின் தந்தை உடலமாக மீட்பு!

breaking
தென்தமிழீழம்  வவுணதீவு  குருந்தையடி முன்மாரி, காஞ்சிரங்குடா கிராமத்திலுள்ள மாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் சடலம் அவரது வீட்டு வளவிலுள்ள மாமரக் கிளையிலிருந்து நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3 பிள்ளைகளின் தந்தையான கதிர்காமத்தம்பி தருமலிங்கம் (வயது 40) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.