ஸ்ரீலங்காவில் போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது!

breaking
கொள்ளுப்பிட்டியில், போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 4 போதைவில்லைகள், ஐஸ் போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதியை சேர்ந்த 38 வயதான சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (17ஆம் திகதி) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.