வடக்கில் படையினரை விலக்கிகொள்ளபேவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது!

breaking
வடக்கில் இராணுவக் குறைப்பை மேற்கொள்ளப்போவதில்லை என்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்தன தெரிவித்துள்ள கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார். யாழில் இன்று  17.04.19இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் இருப்பதற்கான அவசியம் இல்லை. நாங்கள் இராணுவத்தினரை முழுமையாக இங்கிருந்த செல்ல வேண்டுமென கூறவில்லை. ஆனால், வடக்கு கிழக்கில் தேசிய பாதுகாப்பு நிமித்தம் முகாம்களை நிறுவுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் சர்வதேச நாடுகளின் படையெடுப்புக்கள் வரும் அளவிற்கு இலங்கைக்கு அச்சுறுத்தல் கிடையாது. போதைப்பொருட்கள் படையினரை மீறியே கொண்டுவரப்படுகின்றன. அதனை தடுக்க வேண்டியவர்கள் படையினரே. ஆனால் அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ளாது தேசிய பாதுகாப்பிற்காக இங்கு நிலைகொண்டிருப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் மெலும் தெரிவித்துள்ளார்.