மதுபான சாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம்-பிரதேச மக்கள் போராட்டம் !

breaking
கிளிநொச்சி கரடிபோக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபான சாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என தெரிவித்து பிரதேச மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். குறித் போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றது. குறித்த பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பல இருக்கும் நிலையில் அதனை நிவர்த்தி செய்து தராது, அப்பகுதியில் மதுபான சாலையை அமைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த பகுதியில் இரண்டு பாடசாலைகள் உள்ளதாகவும், அப்பகுதியில் மதுபான சாலை அமைப்பதில் எமக்கு உடன்பாடு இல்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த விடயம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் பொலிசார், மதுவரி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
குறித்த  பகுதியில்  மதுபானசாலையை  அமைக்க  வேண்டாம்  என  தெரிவித்து  பலமுறை  மக்கள் போராட்டங்களில்  ஈடுபட்டு  வருகின்றமை  குறிப்பிடதக்கது  என்பதுடன்,  குறித்த  பகுதியில் மதுபான சாலை  ஒன்றை  அமைக்க  தமிழரசு  கட்சி பாராளுமன்ற உறுப்பினர்  அதிக பிரயத்தனப்படுவதாகவும்  தொடர்ந்து மக்கள் குற்றம்சாட்டி  வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.