கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 25 அகவை இளைஞன் கைது!

breaking
முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 25 அகவையுடைய இளைஞன் ஒருவரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பொலீஸ் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
16.04.19 அன்று கள்ளப்பாடு தீர்த்தக்கரைப்பகுதியில் கஞ்சா வியாபாரம் இடம்பெற்று வருவதாக முல்லைத்தீவு மாட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இரவு வேளை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குறித்த சந்தேக நபரிடம் இந்து இரண்டு கிராம் கஞ்சாவினை விலைக்கு வாங்கிய பொலீசார் அவரை கைதுசெய்துள்ளார்கள்.
பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் தங்கி இருந்த வீட்டில் இருந்து 80 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரை 17.04.19 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன்.
கங்சாவுடன் கைதுசெய்யத குற்றவாளி 2014 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மல்லாகம் நீதிமன்றினால் இந்தியாவில் இருந்து 70 கிலோ கஞ்சா யாழ்ப்பாணத்திற்கு கடத்திவந்த குற்றச்சாட்டில் ஜந்து அரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளதுடன் திருகோணமலையில் குற்றச்செயல் ஒன்று தொடர்பில் பிணையில் விடுதலை செய்யப்பட்டும் இவரது வதிவிட அடையாள உறுதிப்படுத்தல் சான்ற எதுவும் இல்லாத நிலையில் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.