இந்தியாவின் எச்சரிக்கையினை உதாசீனம் செய்த ஸ்ரீலங்கா!

breaking
ஸ்ரீலங்கா மற்றும் தமிழர்தாயகத்தில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 140ற்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதுடன் பலநூறு பேர் காயடைந்துள்ளார்கள். ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பினை இது கேள்விக்குள்ளாக்கியுள்ளது கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர் இவர்களை இலக்குவைத்து இந்த தொடர் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்னிலையில் ஸ்ரீலங்காவில் ஏற்படப்போகும் இந்த அசம்பாவிதங்கள் தொடர்பில் இந்தியாவின் உளவுத்துறை ஸ்ரீலங்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தமிழத்தில் இருந்து வெளிவரும் தினத்தந்தி இணைத்தளத்தில் செய்திவெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படலாம் என 4 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. அந்நாட்டில் 4 நாட்களுக்கு முன் லேசான குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோதே இந்திய உளவுப்பிரிவு இலங்கையை எச்சரித்தது. இந்தியா எச்சரிக்கை விடுத்தும் அதிகாரிகள் போதிய கவனம் தராததால் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. என்று தெரிவித்துள்ளது.