மன்னார் மறைமாவட்டத்திலுள்ள ஆலயங்களில் படை பாதுகாப்பு!

breaking
இன்று கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற வெடிவிபத்தினை தொடர்ந்து வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக படையினர் நிறுத்தப்பட்டுள்ளார்கள் மன்னார் மறைமாவட்த்திலுள்ள ஆலயங்களில் சோக மணி ஒலிக்கப்படுவதுடன் ஒலி பெருக்கின் மூலம் இவ் துன்ப நிகழ்வை முன்னிட்டு செபிப்பதையும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. அத்துடன் அனைத்து பங்கு மக்களும் தங்கள் ஆடம்பர நிகழ்வுகளை தவிர்த்து பாதிப்பு அடைந்த மக்களுக்காக செபிக்கும்படியும் வேண்டப்பட்டும் வருகின்றனர். முக்கிய பங்கு தளங்களில் சோக இசையும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன்  ஆலயங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொளளும்படியும் மன்னார் ஆயர் இல்லத்தினால் பங்கு தந்தையருக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளதாக  மன்னார் மறைமாவட்ட ஆயரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சோசை அடிகளார் தெரிவித்தார். தற்பொழுது மன்னார் மறைமாவட்டத்திலுள்ள ஆலயங்களில் இராணுவ பாதுகாப்பும் இடப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.