கட்டாக் காலி நாய்களுக்கு ஓர் காப்பகமாமே?

breaking
ஒட்டகங்கள் கூடராத்தில் தலை விடவில்லை! ஒட்டகங்களை தேடிப்போய் கூடாரம் அடித்தன……… கடாரம் வென்ற சோழனின் குடிகள்! வந்த வெள்ளம் நின்றதால் பெருகின நோய்காவிகள்! பாவிகளே!! பலியானேமே நினைவிருக்கிறதா??? அது சரி! நீ வாக்குப் போட்டவனே உனக்கு குழி பறிக்கும் போது உன்னைக் கொன்றவனே உனக்குக் காவலென நீ நம்புவதில் என்ன குறை? கட்டாக் காலி நாய்களுக்கு ஓர் காப்பகமாமே? அதுவும் திருவாசக அரண்மனை வாசலிலோ என கொதிக்கிறது மனம்! முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி! படித்தாய்! தொல்லைக்கு கொடுக்கின்றாய்…… கொன்றழித்தவன் நின்றாற இடம்! வள்ளலாரைப் படித்தாய் வாடியவனைக் கண்டாயோ வலி கொள்கின்றாய்? வாடி வதங்கி துவண்டு கிடக்கும் இனத்திற்கு நீதி எங்கே? நினைந்தாயா? இல்லை! நீயும் தாய் ஆனாயோ? வந்தாரை வாழ வைத்து வாழ்வை தொலைத்தோம்! வருங்கால சந்ததியையும் தொலைத்தோம்! மிஞ்சியவரைக் காப்பாற்ற கிஞ்சித்தாவது சிந்தியுங்கடா! சிந்தியுகோடா! வாள் வெட்டுக்கு எத்தனை சாவடி போட்டார்கள்? சாவுங்கோடா என்று விட்டவர்கள்தானே இவர்கள்? ஆவாக்கு அரவணைப்புப் போற்தான் இந்த ஆயுத ஜகாதிகளுக்கும் கிழக்கில் அரவணைப்புக் கொடுத்தார்கள் இவர்கள்! இன்று இனங்களிடையே பதட்டம் ஏற்படுத்தி குட்டையில் மீன் பிடிக்க நீயும் வெட்டையில் மேடை கட்டிக் கொடுக்கின்றாய்! கொட்டகை சாயும் போது கொலைக் களத்தில் நீ பலியாடு ஆகிடாதே! பார்த்துப் பத்திரமாய் வாழக் கற்றுக் கொள்! படைக்கும் அவைக்கும் சண்டை என்றால் இடைக்குள் நீ ஏன்? விடை கொடு உன் காருண்யத்திற்கு! அந்த புத்தனே அதைக் கைவிட்டுக் கால் பதித்த பூமி இது! வெள்ளரசுக் கிளை என்பது அவன் பெற்ற ஞானத்தை புதைத்த குழியில் முளைக்க வைத்த மரமானது! உன் மனத்தையும் மரமாக்கு! மரத்துப் போன எமக்கு உரத்துப் பேச இது வேண்டுமா? உரமாகிக் கிடக்கும் உடல்களை நினை! -கமலா பாலன்-