வடதமிழீழ பாடசாலைகள் 8.00 மணிக்கு ஆரம்பமாக ஏற்பாடு

breaking
  தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை அடுத்து, வடக்கு மாகாணப் பாடசாலைகளை காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலைகளைத் தொடங்குதல் தொடர்பாக அதிபர்கள், ஆசிரியர்களின் கருத்துக்கள் கண்டறியப்பட்டு, வடக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அதில் ஶ்ரீலங்கா படைகளின் சோதனை நடவடிக்கைகளால் மாணவர்களின் போக்குவரத்து, அதிபர்கள், ஆசிரியர்களின் போக்குவரத்தில் ஏற்படும் தாமதம் என்பன சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் பாடசாலைகளை காலை:8.00 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 2.00 மணிக்கு நிறைவு செய்வதற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார்.