பிரித்தானிய மண்ணில் 2வது நாளாக தொடரும் அடையாள உண்ணாவிரதம்

breaking

எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம். என்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவமாய் தமிழீழம் நோக்கி தொடர்ந்தும் பயணிக்கின்றோம். என்ற செய்தியை உலக அரங்கில் உரத்துக் கூறும்முகமாகவும், முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு நீதிகேட்டும், 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலிலே கொள்ளப்பட்ட எம் உறவுகளை நினைவுகூர்ந்தும் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி வாரமானது நேற்று 11.05.2019 சனிக்கிழமை தொடங்கி இன்று இரண்டாவது நாளாக தமிழீழ உணர்வாளர்களால் சுழற்சிமுறையிலா அடையாள உண்ணாவிரதம் காலை 10 மணிக்கு ஆரம்பித்திருந்த நிலையில் மாவீரர்களின் சகோதரர் உருத்திராபதி சேகர் அவர்கள் எழுச்சி உரை வழங்கியதோடு உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களுக்கு பழச்சாறு வழங்கி இன்றைய உண்ணாவிரதத்தினை மாலை 6 மணிக்கு நிறைவுக்கு கொண்டுவந்தார்.

பல்லாயிரக்கணக்கான எம் உறவுகளின் இரத்தம்படிந்த முள்ளிவாய்க்கால் மண்ணும் நந்திக்கடல் நீரும் மரியாதை வணக்கத்துக்குரிய ஈகைச்சுடருக்கு அருகில் வைக்கப்பட்டு எழுச்சிகொள்ளப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.