இறுதிப்போர்க்கால அனுபவம்! வைத்தியர் வரதாராஜா அவர்களின் நூல் வெளியீடு!

breaking

முள்ளிவாய்க்காலில் மக்களோடு மக்களாக இறுதிவரை நின்ற வைத்தியர் வரதாராஜா அவர்களின் அனுபவப்பதிவுகளை தாங்கிய A Note from the No Fire Zone என்கின்ற நூல் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டது.

ஸ்கர்பரோ சென்ரானியல் கல்லூரி அஸ்ரன்பி வளாகத்தில் நேற்று சனிக்கிழமை (May 12, 2019) இன் நிகழ்வு காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. நிகழ்வில் மக்கள் பெருமளவில் சமூகமளித்திருந்தார்கள்.

நிகழ்வில் உரையாற்றிய வைத்தியர் வரதாராஜா அவர்கள் தனது வைத்தியதுறையின் ஆரம்ப காலங்கள் பற்றியும் இந்த புத்தகத்தை எழுத தன்னை தூண்டியவர்கள் பற்றியும் தன்னுடன் சேவை மனப்பான்மையுடனும் அர்ப்பனிப்புடனும் அங்கு கடமையாற்றிய சக வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களை பற்றியும் நினைவு கூர்ந்தார்.

காஸ் கய்யோரி (Kass Ghayouri ) அவர்கள் இந்த புத்தகத்தினை தொகுத்திருந்தார், இவர் ஓரு ஆங்கிலம் மற்றும் உளவியல் கற்று தேர்ந்த ஒரு ரொறன்ரோவை சேர்ந்த ஆசிரியர் ஆவார், இந்த புத்தகம் இவரது ஏழாவது புத்தகம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புத்தக வெளியீட்டின் சிறப்பு பிரதிகளை முள்ளிவாய்க்காலில் இறுதிவரை நின்றிருந்த சாட்சிகளான இளமாறன், டாக்டர் கல்யாணி, கமலாம்பிகை அம்மா, சுரேன் கார்த்திகேசு ஆகியோர் பெற்றுகொண்டனர்.

தொடர்ந்து வைத்தியர் வரதராஜா அவர்களின் முள்ளிவாய்க்கால் அனுபவங்களின் உண்மை சம்பவங்களை தழுவியதாக வெளிவரவிருக்கும் “பொய்யா விளக்கு” எனும் முழுநீள திரைப்படத்தின் முன்னோட்டமும் திரையிடப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படம் வரும் செப்ரம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது என்பதனையும் திரைப்படக்கழுவினர் அரங்கத்தில் அறிவித்திருந்தனர்.

மிகையான பார்வையாளர்களுடனும் நிறைவாகவும் நடைபெற்ற இன்நிகழ்வு மக்கள் தங்கள் உடன்பிறப்புக்களுக்கு ஏற்பட்ட துயரங்களை இன்னும் மறக்கவில்லை என்பதனை தெளிவாக எடுத்துக்காட்டியது.

இந்த புத்தகத்தை பெற்றுகொள்ள விரும்புவோர் அமேசானிலும் (amazon) பெற்றுக்கொள்ளலாம்.