தமிழர்களின் காணியினை சிங்கள மக்களுக்கு வழங்க துடிக்கும் அதிகாரிகள!

breaking
முல்லைத்தீவு கொக்குளாய் முகத்ததுவாரம் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணியினை சிங்களமக்களுக்கு வழங்கவேண்டும் என்ற துடிப்புடன் ஊக்கத்துடன் அதிகாரிகள் செயற்படுவதை  வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் 15.05.19 அன்று முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்கள் அவரது அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்.
இதன்போது அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.
முல்லைத்தீவு கொக்குளாய் முகத்துவாரத்தில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு காணி வளங்குவதாக மாவட்ட செயலாளர் அவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டு படையிரின் அறிவித்தலின் பேயரில் அங்குள்ள தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள் அதன் பின்னர் அத்துமீறி குடியேறிய சிங்கள மக்கள் படையினரின் பாதுகாப்புடன் முகத்துவாரம் பகுதியில் இருந்தது என்பதை யாரும் மறுத்துவிடமுடியாது.
இப்படியான நிலையில் சிங்கள மக்கள் தனியாக வந்து குடியேறி இருந்தது என்ற கருத்துக்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது
இது தமிழ்மக்களுடைய காணி உதாரணத்திற்கு கொக்குளாய் பகுதியில் அமைந்துள்ள புத்த விகாரை விடையத்தில் கூட மூன்று தமிழ்மக்களுக்கு சொந்தமான காணியும் பிரதேச சபைக்கு உரிய காணியும் அதில் இருந்து கூட ஒரோ ஒருவர்தான் அதில் வழக்கு போட முன்வந்ததும் தன்னுடைய காணி தனக்கு தேவை என்று முன்வந்ததும் ஏனையவர்கள் பயத்தின் காரணமாக ஏனையவர்கள் காணிக்காக வாதாடவில்லை.
கொக்குளாய் முகத்துவார காணி உரிமையாளர்கள் பல தடவை என்னிடம் விண்ணப்பித்தன் விளைவாக பல தடவைகள் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தமிழ் மக்களுக்கு உரியது தனியாருக்கு உரிய உறுதிக்காணி என்று மாகாணசபையிலும் பலதடவை கதைத்துள்ளோம்.
அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட செயலர்,என எல்லோரும் இருந்த ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் அந்த காணிகள் தனியார் காணி என்ற கருத்து அப்போதைய பிரதேச செயலாளரால் கூறப்பட்டுள்ளது.
இன்று அந்த காணியில் 03 ஏக்கர் காணிகள் அரச காணி இருப்பதாக அறிவித்தலை விட்டு அந்த காணியை குடியேறிய சிங்கள மக்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்கள்.
ஒரு தனியார் காணி சுற்றாடலில் எப்படி 3 ஏக்கர் மட்டும் அரச காணியாக வரமுடியும் என்ற கேள்வியினை நான் கேட்க விரும்புகின்றேன். அந்த சுற்றாடல் முழுவதும் தனியார் காணி என்பதுதான் உண்மை
முல்லைத்தீவுதான் எங்களின் பூர்வீகம் முல்லைத்தீவில் கொக்குளாய் மட்டும் அல்ல பெரும்பாலான காணி விடையங்கள் எங்களுக்கு நன்றாக தெரியும்.
முல்லைத்தீவு முகத்துவாரத்தில் உள்ள காணிகள் அனைத்தும் தனியார் காணி அது தனியாருக்கு சொந்தமானவை இன்று மக்கள் பயந்த சூழ்நிலையில்தான் அனைவரும் அதனை உரிமை கேரவரவில்லையே தவிர இந்த காணிகளுக்கு உரிமை கோரவருவார்கள் அன்று அதிகாரிகள் பதில்சொல்லவேண்டும் தமிழ்மக்களின் காணிகளை அபகரித்து ஏனை இன மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையினை நிறுத்த வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் அவர்தெரிவித்துள்ளார்