குளியாப்பிட்டி பிராந்திய பொலீஸ் அதிகாரி இடம் மாற்றம்!

breaking
ஸ்ரீலங்காவின் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் களுத்துறை பொலிஸ் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன், நுகேகொட பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் மீதான இனவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.