Take a fresh look at your lifestyle.

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய தாக்குதலின் முக்கிய நபர் அதிரடியாக கைது.!

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக புதிய காத்தான்குடியில் மொஹமட் ஆதம் என்பவர் கைதாகியுள்ளார் .

அவர் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் பயன்படுத்துவதற்கான வாகனத்தை கொள்வனவு செய்ததுடன், அதன் இருக்கைகளையும் அமைத்துக் கொடுத்தவர் என சந்தேகத்திலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காத்தான்குடியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  எமக்கு தகவல் கிடைத்துள்ளது