ரிஷாட்டுக்கு எதிராக பிரேரணை கூட்டமைப்பு பரிசீலிக்குமாம்-செல்வம் எம்.பி!

breaking
ஸ்ரீலங்காவின்  அமைச்சர் ரிஷாட் பதியூதீன் குற்றவாளியாக இனங்காணப்பட்டால், அதற்கு ஏற்றவாறு, அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்குமென, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். டெலோவின் முன்னாள் வவுனியா மாவட்டப் பொறுப்பாளர் கிறிஸ்ரி குகராஜாவின் 20ஆம் ஆண்டு நினைவு தினம், வவுனியா - வைரவர் புளியங்குளத்தில், இன்று (15) அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்று மக்களை நிர்கதிக்குள் தள்ளுகின்ற நிலமையை ஏற்படுத்தி விட்டு, ஜனாதிபதி சீனாவுக்குச் சென்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், இப்படியான நேரத்தில், நாட்டிலிருந்து அதனைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பதே அரச தலைவரின் கடமையாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். இதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் குற்றவாளியாகக் கருதப்படுகின்ற பட்சத்திலேயே, அவருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாம் பரிசீலிக்க முடியுமெனவும் இந்த விடயத்தில் தாம் உடனடியாக பதில் சொல்ல முடியாதெனவும், அவர் மேலும் கூறினார்.