முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆயத்தங்கள் தொடர்பாக  அருட்தந்தை லீயோ அடிகளார்!

breaking
 
தமிழ் மக்களுக்கான அநீதி இழைக்கப்பட்ட நாளான  மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஆயத்தங்கள் தொடர்பாக  அருட்தந்தை லீயோ அடிகளார்.....
இந்த வருடம் மே 18 ம்  நாள் எமது தமிழ்  மக்கள் படுகொலை செய்யப்பட்டு  பத்தாவதாண்டு  நினைவுகூறப்படவுள்ளது. இந்நிகழ்வை எட்டு தமிழ் மாவட்ட பிரதிநிதிகள். மதகுருமார்கள். ஆர்வாலர்கள். சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் ஏற்பாட்டிலே  மே 18க்கான நினைவுகூறலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகிறது. இந்திகழ்வு தமிழ்மக்களின் கொடுரத்தை எடுத்துக்காட்டும் நிகழ்வாக அமைகிறது . இந்நிகழ்வு  வருகின்ற சனிக்கிழமை   18 வது  நாள் காலை 10.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு  நினைவுகூறப்படும்.
இந்நிகழ்வுக்கு அனைத்து தமிழ் உறவுகளையும்  வந்து அஞ்சலிசெய்வதோடு  கடந்த 2009 காலப்பகுதியில் எம்தமிழ் மக்கள் தமது உயிரை தக்கவைப்பதற்கு உள்கொண்ட உப்பில்லாக்கஞ்சியையும் எல்லோரும் வீதியோரங்களிலும் தமது வீடுகள் முன்னாலும் வழங்கி எம்மக்கள் பட்ட துன்பத்தை நினைவுகூறவேண்டும் என்பதோடு  அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ள வரும் மக்கள் பொதிகள்  கைப்பைகள் என்பனவற்றை கொண்டுவராது எமது  பாதுகாப்பிற்கு இடையூறு இல்லாது வரவேண்டுமென்றும்  அருட்தந்தை அடிகளார் வேண்டுகின்றார்
  [video width="720" height="480" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/05/VID-20190517-WA0021_x264.mp4"][/video]