முள்ளிவாயக்கால் படையினரின் பாதுகாப்பு வலயத்திற்குள்!

breaking

முல்லைத்தீவு மாவட்டம் முளிளிவாய்க்கால் பகுதிக்கு செல்லும் வீதிகளில் படையினர் சோதனை நிலையங்களை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிரித்துள்ளார்கள்.

நாளை 18.05.18 அன்று முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வு மக்களால் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் படையினர் மற்றும் பொலீசார் புலனாய்வாளர்களின் காண்காணிப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புதுக்குடியிருப்பில் செல்லும் வீதியில் மாத்தளன் சந்திப்பகுதியில் புதிதாக ஒரு படையினரின் சோதனை நிலையம் அமைக்கப்பட்டு பேருந்துக்களில் வாகனங்களில் செல்லும் மக்களை சோதனையிடும் நடவடிக்கையினை தொடங்கியுள்ள அதேவேளை வட்டுவாகல் பாலம் அருகில் முல்லைத்தீவில் இருந்து செல்பவர்களை சோதனை செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

அதிகளவான படையினர் குவிக்கப்பட்டு வீதி மறியல்கள் ஏற்படுத்தப்பட்டு குறித்த வீதியால் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது.

எதிர்வரும் 20 ஆம் திகதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்விற்கு அதியுயர் பாதுகாப்பினை படையினர் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சோதனை நிலையங்களும் சோதனை நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.