Take a fresh look at your lifestyle.

தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 மெல்பேர்ண் நிகழ்வு May 18 Tamil Genocide Remembrance Day – Melbourne

சுடர்விட்டுப் பிரகாசித்த எமது தாய்நிலம், புதிய நூற்றாண்டின் கொடிய இன அழிப்பின் சாட்சியாய், அழிவுகளையும் அவலங்களையும் சந்தித்து பத்தாண்டுகள் உருண்டோடிவிட்டன. விடுதலைக்காய்ப் போராடிய போராளிகளும், தேசத்தின் மக்களாய் எம்மண்ணோடு வாழ்ந்த எமது உறவுகளுமென, நிறைந்த எமது தாயகம் இனவாதப்படைகளின் கொடிய போராயுதங்களின், மனிதாபிமானமற்ற போரில் சிதறடிக்கப்பட்டது.

இலங்கைத்தீவில், தமிழினத்தின் இருப்பை அழிப்பதிலேயே, காலங்காலமாய்க் குறியாயிருந்த சிங்கள தேசத்தின் படைகள், முள்ளிவாய்க்காலில் அதன் உச்சக் கட்ட இனவழிப்பை நிகழ்த்தியது. எனினும் மீண்டும் எழுவோம் என்ற நம்பிக்கையுடன், இக்கொடிய போரில் இழந்துபோன எம்முறவுகளை நினைவில் ஏந்தி, உலகப் பரப்பெங்கும் தமிழர் வாழும் தேசங்களில் மேமாதம் 18ம் நாளை ‘தமிழர் இனவழிப்பு நினைவுநாள்’ என்று நினைவு கூரப்படுகின்றது.

அவ்வகையில், 2009-ம்ஆண்டு மேமாதம் முள்ளிவாய்க்காலில் இறுதியுத்தநாட்களில் சிங்களப் பேரின வாத அரசினால் தமிழ்மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவழிப்புப் போரின்போது காவுகொள்ளப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழ்மக்களின் 10வது ஆண்டு நினைவு தினமும்,காலத்திற்குக்காலம் சிங்களப்பேரினவாத அரசினால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவான தமிழர் இனவழிப்பு நினைவுநாளும் மெல்பேர்ண் நகரில் கங்கேரியன் மண்டபத்தில் உணர்வெழுசிசியுடன் எதிர்வரும் மே 18ம் நாள் சனிக்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. எம்மினம்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பை நினைவுகூரும் இந்நிகழ்வில்,தமிழர்கள் அனைவரும் அணிதிரண்டு பங்கேற்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.

இடம் (Venue): Hungarian Community Centre, 760 Boronia Rd, Wantirna VIC 3152.

காலம் (Time): 18/05/2019 சனிக்கிழமை, மாலை 6.00P.M

மேலதிக தொடர்புகளுக்கு (Contact): 0433 002 619 or 0404 802 104