பத்தலையோ….பத்தாண்டுகள் திரும்பலையே…பார்வையின்னும்…….- சுதர்சினி நேசதுரை

breaking
   அண்டமதில்புவிஒன்று கண்டமதில்தீவொன்றாம் சின்னஞ்சிறியஈழமொன்றின் சத்தமொன்றும்கேட்கலையோ…… கூடுகட்டிவாழ்ந்திருந்த கூடிஆடிமகிழ்ந்திருந்த குருவிகளின்ஈனவொலி குவலயத்தின்காதில்விழவில்லையோ…… பார்ஆண்டபழந்தமிழன் பாதகத்தார்கைப்பிடியில் பாடுபட்டுப்போனகதை பார்த்தவர்கள்யாரும்மிலையோ….. தேசமெங்கும்சல்லடைகள் தேகமெங்கும்சன்னங்கள் கொத்துக்குண்டுகளால்ஈழத்தில் செத்தவர்களைநீரும்பாக்கலையோ…… செத்தவர்உடலைக்கூட தொட்டுவிடக்கூடாதென எலும்புகூடமிஞ்சாமல் எரிகுண்டுஅழித்ததையும் தேசத்தின்இளம்வித்துகளும் தேசம்காத்தவிழுதுகளும் தேற்றஅங்குயாருமின்றி தேம்பித்தேம்பிஅழுததையும்……..   பாதகரின்படுகுழியில்பலரையும் பாதயாத்திரையில்சிலரையும் பசித்தவயிறுஆற்றாமல்இன்னும்பலரையும் பார்த்திருக்கப்பிரிந்தோமே அதையும்பாக்கலையோ….. ஒன்றன்மேல்ஒன்றாக ஒன்றல்லஓராயிரம்உடலங்களை ஒருபாடையில்ஒன்றாக்கி ஒற்றைதீதின்றதையும்பாக்கலையோ…. அல்லோலப்பட்டதேசமக்கள் அரைவயிறுக்கஞ்சிஇன்றி காததூரம்போனகதை கண்உள்ளவரேகாணலையோ……… கண்டிருந்தால்கண்டிருப்போமேவிடிவெள்ளியை கண்டும்காணததும்போல்இன்றும் கரைகிறதுகாலவோட்டத்தில்எம்வாழ்வு கரைசேர்க்கயார்வருவீரோ…….. இழந்தவைஎன்றும்இழந்தவையே இருப்பதைஇனிஇருப்பாக்குவோம்….. இத்தனைநாள்இமையாதிருந்தது ஈழம்மடியில்தலைசாயவே……. பாராதவிழிகளையும்இங்கு பேசாதமொழிகளையும்வரைவில் தேடாதவிரல்களையும்இனி ஓயாமல்பார்க்கவைப்போம் எங்கோஒருமூலையில் ஏதோஒருஇடத்திலென்போர்க்கு எள்மூக்கின்நுனிஅளவாயினும் அதுஎம்தேசமெனபறைசாற்றுவோம்   நன்றி சுதர்சினி நேசதுரை