ஸ்ரீலங்காவிற்கு சமாதானப் படையை அனுப்பவும் – 10 அமைப்புக்கள் கோரிக்கை!

breaking
புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் உட்பட சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் 10 இணைந்து ஸ்ரீலங்காவிற்கு  உடன் ஐக்கிய நாடுகளின் சமாதானப் படையை அனுப்புமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. பி.பி.சி. சேவை உட்பட பிரித்தானியாவின் மூன்று பிரபல ஊடகங்கள் ஸ்ரீலங்காவில் தற்பொழுது நிலவும் பாதுகாப்புப் பிரச்சினைக்கு பௌத்தர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என கூறிவருகின்றமை இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வேண்டுகோளை கருத்தில் கொண்டு ஐ.நா.வின் விசேட பிரதிநிதிகள் இருவரான அடமா டியன் மற்றும் காரன் யயந்த ஆகியோர் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு கடிதமொன்றும் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஒரு நாட்டில் வாழும் மக்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பை வழங்க முடியாமல் போகுமாயின், ஆர். 2 பீ சட்டத்தின் கீழ் சமாதானப் படையை அந்நாட்டுக்கு அனுப்ப ஐக்கிய நாடுகளுக்கு முடியும். கடந்த வன்னி யுத்தத்தின் போது கொழும்பு இனக்குழு கல்வி நிறுவனத்தின் பிரதானியான ராதா மானி, இந்நாட்டுக்கு சமாதானப் படையை அனுப்புமாறு ஐ.நா.வுக்கு கோரிக்கை விடுத்ததற்காக, அவரை இந்நாட்டிலிருந்து வெளியேற்றுமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும் கொழும்பில் உள்ள ஊடகம் ஒன்று சொய்தி வெளியிட்டுள்ளது.