சைபர் தாக்குதலால் திணறும் சிறிலங்கா அரசு!

breaking

சிறிலங்கா அரச இணையத்தளங்கள் மற்றும் சில தூதரகங்கள் மீதும் சைபர் தாக்குதல் ஒன்று கடந்த 18.05.19 அன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால்  இணையத்தளங்கள்  இரண்டு நாட்கள் முடங்கின.

தமிழீழ சைபர் படை அணி என்ற பெயரில் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை சிறிலங்கா அரசினை அச்சம் கொள்ளவைத்துள்ளது.

தென்னிலங்கையிலும் சிங்கள ஊடகங்களிலும் இது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

[embed]https://youtu.be/AcBL45dnUQw[/embed]

குறிப்பாக இணையவழித்தாக்குதல்களை விடுதலைப்புலிகள் தமது ஒரு இராணுவ யுக்தியாகவே கடந்த காலங்களில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

குறி்ப்பாக 1997 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு படை நடவடிக்கை காலகட்டத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் தூதரகங்களின் வலையமைப்பு இரண்டு தடவைகள் இரண்டுகிழமையாக சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

தமிழ் கரும்புலிகள் என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அன்று தமிழினத்தினை அழிக்க போருக்கு உதவி கேட்க இருந்த தூதரகங்களை இலக்காக கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஸ்ரீலங்காவிற்கு உதவி கிடைப்பதை தடுப்பதன் நோக்காக கொண்டு இந்த யுத்தியினை கையாண்டுள்ளார்கள்.

இதன் மூலம் முதல் முதல் சைபர் வழித்தாக்குதலை படைஉத்தியாக பயன்படுத்தி தாக்குதல் நடத்தியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் தான் என்பது உலக வல்லாதிக்க சக்திகளை வியப்பிற்குள்ளாகியிருந்தது.

அதன் பின்னர் முள்ளிவாய்க்கால் ஆயுத போர் மௌனிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் சிறிலங்கா படையினரின் படை இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலும் உலகளவில் அந்த காலப்பகுதியில் பேசப்பட்டது எனலாம்.

இது சிறிலங்கா படை அதிகாரிகளுக்கே பாரிய சவாலாக காணப்பட்டுள்ளது இந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாத நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு படைத்தளபதியால் ஸ்ரீலங்கா படைப்பிரிவில் சிக்னல் படைஅணியின் கீழ் ஒரு சைபர் படைஅணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னார் கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவின் ஊடகஅமைச்சின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

அன்றில் இருந்து சைபர் தாக்குதலை தடுப்பதற்காக படை அணிஒன்று உருவாக்க பரிந்துரைத்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதன் வெளிப்பாடக சைபர் படை அணியினை 2018 ஆம் ஆண்டு சிறிலங்கா படைப்பிரிவில் இணைத்துக்கொண்டது.

ஒப்பிறேசன் ஸ்ரீலங்கா என்றபெயரில் நடத்தப்பட்ட தாக்குதல் சிறிலங்காபடைப்பிரிவிலும் மற்றும் சிறிலங்காவில் இயங்கும் இணையத்தளங்கள் மீதும் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதற்கு ஒப்பிரேசன் சிறிலங்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இன அழிப்பினை மேற்கொண்ட பத்து ஆண்டுகளின் நினைவான 2019 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி சிறிலங்காவில் அதிகளவான இணையத்தளங்கள் இலக்கு வைக்கப்பட்டு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்னிலையில் இந்த சைபர் தாக்குதலால் ஸ்ரீலங்காவின் பாதுபாப்பு பிரிவினர் திணறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சைபர் தாக்குதல் என்பது தொடர்ச்சியாக சிறிலங்கா மீது நடத்தப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்பு பிரிவினரால் தீர்மானிக்கப்பட்டாலும் என்றும் இல்லாத வாறு இந்த ஆண்டு அதிகளவான இணையத்தளங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சிறிலங்கா அரசினை மட்டுமல்ல அரசிற்கு ஆதரவான வல்லரசுகளின் புலனாய்வினையும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

எகிப்த்து, சிரியா போன்ற மத்தியகிழக்கு நாடுகளில் நடைபெற்றுக்கொண்டிருந்த சர்வதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் போர்க்கொடிதூக்கியது 2010 ஆம் ஆண்டு துனிசிய மக்களால் தொடக்கப்பட்ட போராட்டம் அதன் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சர்வதிகார போக்கிற்கு எதிராக அரேபிய வசந்தம் என்ற பெயரில் சைபர் தாக்குதல் மாற்றம் பெற்று மக்களின் போராட்டத்திற்கு பெரும் பங்காற்றியது அந்த நாடுகளின் அரசின் வலையமைப்புக்கள் முடக்கப்பட்டன இதன் ஊடாகவே மக்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது என்றும் கருதலாம்

இதன் ஊடாக பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் ஜனாதிபதிகள் மாற்றப்பட்டார்கள் இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவிய சைபர் தாக்குதல் அரேபிய வசந்தம் என்று பெயர் பெற்றது

இந்த சைபர் தாக்குதல்தான் உலக நாடுகளில் கவனத்திலும் வரலாற்றிலும் பதிவாகியள்ளது. பல மாற்றங்களை உண்டுபண்ணிள்யுள்ளதை மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவரலாறுகள் ஊடாக அறியமுடிகின்றது.

இவ்வாறான நிலையில் சிறிலங்கா மீது மேற்கொள்ளப்படும் சைபர் தாக்குதல் ஒரு முடில்ல தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தின் அடுத்த கட்டவடிவமாக ஸ்ரீலங்கா அரசு பார்கின்றது.

இனஅழிப்பின் பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் சிறிலங்கா அரசினதும் பாதுகாப்பு படையினரை நினைவிற்கூறும் வெற்றிவிழாவினை கதைத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் தென்னிலங்ககையில் சைபர் தாக்கதலை பற்றியே அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன.

தொழில் நுட்ப வளச்சியின் அடுத்த கட்ட நகர்வினையும் கண்டுபிடிப்புக்களையும் மேற்கொண்டு சிங்கள அரசினை கதிகலங்க செய்த இந்த சைபர் தாக்குதல் இத்துடன் நின்றுவிடபோவதில்லை என்பதை கடந்த கால சைபர் தாக்குதல் வரலாறுகள் சொல்லி நிக்கின்றன.