கேணல் கீதன் மாஸ்ரர் அவர்களின் 12ம் ஆண்டு நினைவில் - கீதனுடன் ஒரு உரையாடல் .!

breaking

கேணல் கீதன் மாஸ்டர் இந்த இடத்தில் இந்த போராளியைப் பற்றி கூறியே ஆகவேண்டும். எத்தனையோ வசதி வாய்ப்புக்கள் இருந்தும் தனது குடும்பம் வெளிநாட்டில் வசித்தாலும் தமிழீழ விடுதலையை தன் உயிர் மூச்சாக நினைத்து பீசிங் எனப்படும் முட்டு வருத்தத்தின் மத்தியிலும் தலைவனையும் சக போராளிகளையும் உயிராக நேசித்த உன்னதமான போராளி கேணல் கீதன் தன் ஏலாத உடல் நிலையிலும் தலைவரின் எண்ணங்களுக்கு 100% செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்று தானும் கால நேரம் பாராமல் செயல்பட்டு தன் சக போராளிகளையும் செயற்பட வைத்த அரிய செயல்பாட்டாளன். லெப்.கேணல் ராஜன் கல்விப் பிரிவு தொடங்கி லெப் கேணல் திலீபன் கல்லூரி வரை தலைவரின் எண்ணக்கருவுக்கு ஏற்ப உருவாக்கி திறம்பட செயலாற்றிய அரிய தளபதிகளில் ஒருவர் பல திறமையான போராளிகளை இனங்கண்டு தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்ற அற்புதமான தளபதி.பூனகரிபடையணி உருவாக்கத்தின் கதாநாயகன். மன்னார் களமுனை தொடக்கம் முள்ளிவாய்க்கால்களமுனை வரைபூனகரிப்படையணியின் அற்புதமான வரலாற்று சமர்களை கேணல் ஈழப்பிரியனோடு சேர்ந்து வழிநடத்தி சாதனைகள் செய்த அற்புத தளபதிக்கு வீரவணக்கம். இவருடன் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீர வணக்கம்




கீதனுடன் உரையாடுகின்ற வாய்ப்பின்மூலம் நாம் பல புதிய செய்திகளை அறியக்கூடியதாக இருந்தது. அவர் ஒரு விடுதலைப் போராளி. போராளிகளுக்கான கல்விப் பிரிவிலும் இயங்கிவருகிறவர். பல கள முனைகளில் நின்று களமாடிய வீரன். மாவீரர்கள் பற்றி நெஞ்சு கணக்கும் கதைகளைச் சுமந்துதிரிகிறவர். விடுதலைப் போராளிகளின்இடத்தில் கலை இலக்கியச் செயற்பாடுகள் வளர்ந்து வருகிறதாக சொல்கிறார். கலைஇலக்கியச்செயற்பாடுகள் மூலமும் தாம் சமூக விழிப்புணர்வை ஊட்டப் பாடுபடுவ தாகச் சொல்கிறார். விடுதலையின் தரிசனர்களாகபோராளிகள் திகழ்கிறார்கள், உண்மையை அவர்கள் தேடிப் பயணப்படுகிறார்கள், நல்ல மனிதர்களாக இருக்கின்றார்கள் .அத்தகைய பண்புகள் நிறைந்த போராளிகளில் ஒருவரான கீதனிடம் நாம் பல கேள்விகளைக் கேட்டோம். மாவீரர்கள் பற்றியும் அவர் கதை கதையாகச் சொன்னார் அவற்றையெல்லாம் இங்கு பதிந்து விட முடிய வில்லை எதிர்காலத்தில் அவற்றை  பதிவாக்க முயல்வோம். பல வேலைப் பளுக்களுக்கு மத்தியிலும் நீண்ட நேரமாக சமூக மானுட விடுதலை குறித்து அவர் உரையாடினைார். அத்தகைய உரையாடலின் ஒரு பகுதி
யையே இங்கு தருகிறோம்





கேள்வி :போராளிகளுக்கான கல்விச் செயற்பாடுகள் பற்றிச் சொல்லுங்கள்?
கீதன்: எங்கட விடுதலைப் போராட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் போராளிகளுக்கு விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த  காலத்தில்இருநதது உள்ள  வரலாறு பற்றியும்  விடுதலைப் போராட்டம் பற்றியும் கற்பிக்கப்படும். அதை வழி நடத்திக்கொண்டிருக்கும் தேசியத் தலைவர் அவர்களுடைய
வரலாறு குறித்தும் சொல்லப்படும். சண்டைக்களங்களிலும்சமர்க்களங்களிலும், யுத்தங்களிலும் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்கள் குறித்த முழுமையான வரலாற்றைக் கற்பிப்பதுமாக இக்கல்விச் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன
வரலாறுதான் வழி காட்டி எனத் தலைவர் சொன்னதற்கமைய உலகத்தில்  நடைபெற்ற விடுதலைப் போராட்டங்கள் பற்றியும் அந்த விடுதலைப் போராட்டங்கள் நகர்ந்த விதங்கள் பற்றியும் மக்களும் போராளிகளுமாக எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதுபற்றியும் அறிவதாக இது அமைந்திருகின்றது  உலகில்     நடைபெற்ற விடுதலைப் போராட்டங்கள் இராணுவ ரீதியாக அரசியல்ரீதியாக எவ்வாறு இயங்கின என்பவற்றையும்
போராளிகளுக்கு கற்பிப்போம் .(வேர்கள் இணையம்)
இதை விட தமிழர்களுடைய வரலாறு, சிங்கள பௌத்த பேரினவாதத்தினுடைய வரலாறு, அண்டை நாடுகளின் வரலாறு என்பன கற்பிக்கப்படும். மேலும் தமிழ் மக்கள் மீது காலம்காலமாக அடக்கு முறையைப் பிரயோகித்து வரும் வரலாறு
குறித்தும்  தமிழ்  மக்களுடைய வாழ்வியல்  உரிமைகளும்அரசியல் உரிமைகளும் எவ்வாறு பறிக்கப்பட்டன என்பது குறித்தும், பேரினவாதத்தினுடைய அடிப்படைச் சிந்தனை உளவியல் குறித்தும் கல்வி கற்பிக்கப்படுகிறது எங்களுடைய பணிகள் தொடர்பான கல்வி ஊட்டலும்
நடைபெறுகிறது. சமர்க்களங்களில் போராளிகளின் செயற்பாடுகள்
நிர்வாகத் துறையில் போராளிகளின் செயற்பாடுகள் என பரந்துபட்டதாக முன்னெடுக்கப்படுகிறது






கேள்வி : லெப்டின் கேணல் ராஜன் கல்விப் பிரிவு பற்றியும் அது
மேற்கொண்டு வரும் முயற்சிகள் பற்றியும் குறிப்பிடுங்கள்?
 
கீதன்: லெப்டின் கேணல் ராஐன் அண்ணன் அவர்கள் பல சமர்க்களங்களில் நின்று சமராடியவர் . நீண்ட போரிடும் ஆற்றலும் அனுபவமும் கொண்ட ஒருவர். களத்தில் பல வெற்றிகளை ஈட்டித்தந்தவர். அவர் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையின் தளபதியாக இருந்தவர். எமது விடுதலைப் போராட்டத்தின் மூத்த தளபதி ச.பொட்டம்மான் அவர்கள் எழுதிய கட்டுரையில் சிறப்பாக அவர்
பற்றி எழுதுகிறார். சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையின் நெருப்பாற்றின் நீச்சலில் பத்தாண்டுகள் என்ற நூலில் அவர் தொடர்பான கட்டுரைகளை நீங்கள் படிக்கலாம் எங்கட விடுதலைப் போராட்டத்தில் முதன்முதலாக போராளிகளுக்கான அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி நடத்தப்பட்டது. அக்கல்லூரியின் பொறுப்பாளராக ராஜன் அண்ணனே இருந்தார்
ஆளுமையும், அறிவும், பலமும், உறுதியும், திடமும் மிக்கவர்களாக வளர்ப்பதில் அவர் காட்டிய அக்கறை அவரின் வழி நடத்தல் போன்ற பல்வேறு விடயங்களைக்கருத்தில் கொண்டே அவரது பெயரில் லெப்டின் கேணல்
ராஜன் கல்விப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது போராளிகளின் கல்வி சம்பந்தமான விடயங்களிலும் அறிவு மேம்பாட்டு விடயங்களிலும் அக்கறை கொண்டு செயற்படும் அமைப்புத்தான் லெப்டின் கேணல் ராஐன் கல்விப் பிரிவு
போரினால் பாதிக்கப்பட்ட மாணவர் சமூகத்தை அடுத்த
நிலைக்குக் கொண்டுசெல்வதற்காக பலதரபட்ட செயற்பாடுகளில்
ஆழமாக அது இயங்குகிறது சிறீலங்கா பேரினவாத அரசால் தயாரிக்கப்படுகின்ற பாடநூல்கள் தான் எமது மாணவர்களுக்கான பாட நூலாக
இருக்கிறது என்றால் யோசித்துப் பாருங்கள் நிலைமை எவ்வாறு
இருக்குமென்று. யாழ் பொது சன நூல் நிலையத்தை எரியூட்டி அழித்தவர்கள் எமது இனத்தின் வரலாற்றுச் சுவடுகளையேஅழித்துவிட முயன்றிருக்கிறார்கள் வேர்கள்.கொம்
அந்த வரலாற்றுச் சான்று நூல்களை அழித்துவிட்டு தமது வரலாறுகளை எம் மீது திணிப்பதற்கான திட்டமிட்ட நடவடிககையாக அதனைப்பார்க்கலாம்
கந்தளாய் குளத்தை குளக் கோட்ட மன்னன் கட்டினான் என்பது வரலாறு. சிங்கள வரலாற்றுப் பாட நூல்களில் அதைச் சிங்கள மன்னனே கட்டினான் என ஒரு பொய்ப்புனைவை கட்டி எழுப்புகிறார்கள். வரலாறு என்பது கற்பனையான ஒன்றல்ல. அது உண்மைகளின் விரிவு. இந்த நிலையில் எங்களுடைய
வரலாற்றை நாங்களே எழுதுதல் என்பதும் எமது கடமைகளுள் ஒன்றாகிறது போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்துதல் வகுப்புக்கள் நடாத்துதல் என பணிகள் விரிந்துகிடக்கிறது. உண்மையில் ஒரு நாடு நாடாக இருக்கவேணும் என்றால் ஒரு இனம் இனமாக இருக்கவேண்டும்
என்றால், இரண்டு விடயங்களை முக்கியமானதாகக்ககருதுகிறேன். ஒன்று வீரம், இரண்டு அறிவு வீரத்தையும் அறிவையும் ஒருங்கிணைத்து பலம் கொண்ட சக்தியாக வளரும் பொழுதுதான் ஒரு நாடு யாருக்கும் அடிமைப்படாமல் இருக்க முடியும். இந்த இரண்டு விடயங்களைக் கட்டி வளர்த்துச் செல்வதும் எமது கல்விப் பிரிவின் பிரதான நோக்கங்களாக
இருக்கின்றன அறிவாற்றலை வளர்ப்போம் அவனியில் உயர்வோம்’இதுவே
கல்லூரியின் பிரதானமான கோஷமாக, தாரக மந்திரமாக இருக்கிறது
கேள்வி :மகாவம்சம் போன்ற புனைவுகளை வரலாற்று ஆதாரமாக சிங்கள
பேரினவாதம் கொண்டுள்ளமை குறித்து.?
 
கீதன்: சிங்கள பேரினவாதம் என்பது அடிப்படையில் ஒரு கற்பனையான கதையில் இயங்கிக் கொண்டிருக்கிறது திட்டமிட்டு திரித்து எழுதப்பட்ட மகாவம்சத்தினுடையஅடிப்படையில் அது இயங்குகிறது. தமிழ் மக்களுடைய வாழ்வை , தேசியப் பண்புகளை திட்டமிட்டு அழிக்கவென்றே புனையப்பட்ட
மிகப் பிரமாண்டமான ஒரு பொய் மூட்டையின் கட்டுத்தான் இந்த மகாவம்சம். அந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே சிறீலங்கா பேரினவாதம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மகாவம்சம் என்ன சொல்கிறதென்றால் இலங்கைத் தீவில் ‘வாழப் பிறந்தவனும் ஆளப் பிறந்தவனும் சிங்களவனே’ இலங்கைத் தீவென்பது; ஒரு நாடு, ஒரு இனம், ஒரு மதம், ஒரு மொழி, ஒரு அரசு, ஒரு ஆட்சி என்கிற
அம்சங்களுக்குள்தான் இருக்க முடியும் என அது சொல்கிறது அதைச் சிங்கள மக்களிடையே ஆழமாகப் போதித்துக்கொண்டும் வருகிறது. அதற்கூடாக காலம் காலமாக தமிழ் மீது அநீதியான போரையும் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது
நாங்கள் ஒரு தேசிய இனம். எங்களிடம் பூர்விக நிலங்கள் உள்ளன. பாரம்பரியமான மொழி இருக்கிறது. தனித்துவமான கலை பண்பாடு இருக்கிறது. நீண்ட வரலாறு இருக்கிறது. தனித்து வாழக் கூடிய பொருளாதாரம் இருக்கிறது. ஒரு தேசிய இனத்துக்கு இருக்க வேண்டிய அனைத்துப் பண்புகளும்
எங்களுடைய இததுககு இருககிறது . எங்களுடைய பாரம்பரியமான வாழ் நிலங்களை திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் ஊடாக சிங்கள அரசு நிலப்பறிப்புசெய்து வந்தது, வருகிறது. 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம்
அடைந்ததிலிருந்தே தமிழர்களின் குடியியல் வாழ்வுக்கு பெரும் தொல்லை இழைப்பதாக அது இயங்கி வருகிறது. எங்களுடைய நிலங்களை அழிக்க வெளிக்கிட்டது. எங்களுடைய நிலங்களை பறிக்க வெளிக்கிட்டது. எங்கட மக்களை மண்ணில் இருந்து அடித்து விரட்டி அகதியாக்கியது சிங்கள  பேரினவாதம்.
அடையாள  அழிப்புக்கள் நிலப் பறிப்புக்கள், மொழி அழிப்புக்கள், பண்பாட்டு சிதைப்புக்கள், பொருளாதார சிதைப்புக்கள் போன்றவற்றுக்கூடாக தமிழர் வாழ்வை சீரழித்து தமிழர்கள் ஒரு தேசிய இனம் அல்ல என்பதை நிறுவமுயன்றது.


கேள்வி :இனவாத அரசின் அடக்குமுறை சட்டங்கள் தமிழ் மாணவர் சமூகத்தை எவ்வாறு சீரழிக்கத்தொடங்கியது?
கீதன்: கல்வி ரீதியான அடக்குமுறைச் சட்டங்களில் மொழி முக்கியமான இடத்தை வகித்தது. 1956ம் ஆண்டுகளிலிருந்தே தமிழ் மொழி அழிப்புத் தொடர்பான செயலில் சிங்கள அரசாங்கம் திட்டமிட்டு இயங்கத்தொடங்குகிறது. தனிச்சிங்களமும் 1961 ம் ஆண்டு நீதிமன்ற மொழி சட்ட மூலத்தைக் கொண்டுவந்ததன் மூலமும் அது தனது அழிப்பு நடவடிக்கையை தொடங்கிவிட்டது . நீதிமன்றங்களில் சிங்கள மொழியில் தான் வழக்குகள் நடைபெறும் என்பதாக அந்தச் சட்ட மூலம் இருந்தது. 1970 ம் ஆண்டுகளில் தரப்படுத்தல் சட்டம் என்று சொல்லி தமிழ் மாணவர்களுடைய கல்வித் தரத்தை , தமிழ் மாணவர்களுடைய மேன் நிலை அடைகிற சூழலை புறக்கணித்து ஒரு கீழ் நிலைக்குத் தள்ளும் முயற்சிகளைத் தொடங்கிற்று. ஆரம்ப காலங்களில் தமிழ் மொழி அழிப்பு நடவடிக்கையை சட்டத்திட்டங்கள் மூலம் முயன்ற பேரினவாதம் யுத்த காலத்திலோ ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கை மூலம்
அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியது. பாடசாலை மாணவர்களை சிறைப்டிபிடித்து  அவர்களை  கொன்றொழித்தது.
பாடசாலைகள் மீது விமானங்கள் குண்டுவீச்சு தாககுதல்களை நிகழ்த்தியது.
வெள்ளைச் சீருடையுடன் போன பள்ளி சிறார்களை இரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தது பாடசாலைக்கான வளங்களை பல தடைகளுக்கூடாகத் தடுத்து
நிறுத்தியது. இடங்களைப் பிடிச்சு எங்கட மக்களை அகதிகளாக்கி மாணவர்களின் கல்வியைச் சிதைத்த பிறகு நேரடியான யுத்தத்துக்கூடாகவும் ஆக்கிரமிப்புக்கூடாகவும் கல்வியை மாணவர்  சமூகத்தை காலம் காலமாக திட்டமிட்டு சிங்களப் பேரினவாதம் அழித்தே வருகிறது.



கேள்வி :சிறீலங்கா பௌத்த பேரினவாத அரசு, தமிழ் மாணவர்களுடைய கல்வியை திட்டமிட்டுச் சீரழித்து வந்திருக்கும் இந்த நிலையில் தமிழ் சிறார்கள் மீது அக்கறைப்படுவதாக காட்டிக்கொள்ளும் அதன் உளவியல் குறித்து பேச முடியுமா?
 
கீதன்: காலம் காலமாக எங்கட மாணவர் சமூகத்தை , இளம் சமூகத்தை, துடிப்புள்ள தேசத்தை அடுத்தகட்டத்திற்கு வளர்த்துச்செல்கிற எங்கட சமூகத்தை, சிறீலங்கா அரசாங்கமும் அதன் ஆக்கிரமிப்பு  படைகளும் அழித்த வரலாற்றை நீங்கள் ஆழமாக அறிந்திருப்பீர்கள் இப்பேற்ப்பட்ட சிறீலங்கா பேரினவாத ஆட்சியாளர்கள் சிறுவர்களைப் பற்றி அக்கறை கொள்வதாக சர்வதேச சமூகத்திடம் கதை அளந்துகொண்டிருக்கின்றனர்  இவர்கள் செய்த கொடுரங்களைச் சொல்வதென்றால் சொல்லி கொண்டே போகலாம்
1958 ம் ஆண்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட இன கலவரத்தின் போது பிறந்து கிடந்த குழந்தையை இரண்டாகக் கிழித்துக்கொன்றவர்கள். கொதிக்கும் தார்ப்பீப்பாவுக்குள் குழந்தையைத் தூக்கி எறிந்து கொன்ற்வர்கள். ஒரு தமிழ் குழந்தை பிறந்துவளர்ந்து வரக்கூடாது என்பதற்காக பிறப்பிலேயே
அழித்தவர்கள். கருவிலேயே அழித்தவர்கள் வயிற்றுக்குள்ளேயே அழித்தவர்கள். அப்படி நிகழ்ந்த கதைகளும் இன்றும் வரலாறுகளாக உள்ளன.
அப்பேர்ப்பட்ட சிங்களப் பேரினவாத அரசாங்கம் இன்று தமிழ் சிறார்கள் மீது அக்கறை கொள்வதாக காட்டிக்கொள்கிறது நவாலிப் படுகொலையாக இருக்கலாம், புதுக் குடியிருப்பில் நடைபெற்ற மண்டுவில் படுகொலையாக இருக்கலாம், தென்தமிழீழத்தில் நடைபெற்ற படுகொலைகளாக இருக்கலாம்
எல்லாம் அவர்களின் மனித விரோத செயற்பாடுகளின் உச்சங்களாக விளங்குகின்றன. பாடசாலைக்குப் போன பிள்ளைகளின் சடலங்களே வீட்டுக்குத் திரும்பி வந்த வரலாறுகள் இன்னும் அழிந்து விடவில்லை . இளம் மாணவசமுதாயத்தை அழித்துக்கொன்ற வரலாற்றின் ஈரம் இன்னும்
காய்ந்துபோகவில்லை போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான தொழில்நுட்பக் கல்லூரியை புனர்வாழ்வுக் கழகம் நடத்தி வருகிறது
அவர்களிடம் நீங்கள் சந்தித்துப் பேசினால், சிங்களப்  பேரினவாதத்தால் அவர்களுடைய கல்வி எவ்வாறு பாதிப்புக்குள்ளாகியது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். அண்மைக் காலச் சம்பவங்களைக் கூட நான் உங்களுக்கு
சொல்லலாம். அண்மையில் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின்அதிபரும் கோப்பாய் எழுச்சிப் பேரவைச் செயலாளருமான திருநடராஜா சிவகடாட்சம்  சுட்டுக்கொல்லப்பட்டார் இராணுவப் புலனாய்வு அமைப்பும் அவர்களோடு சேர்ந்து இயங்குகிற ஒட்டு அமைப்பும் சேர்ந் இந்தப் படுகொலைகளைச் செய்திருக்கிறதுர்கள், மாணவர்களைக் கல்வியிலும் கலைபண்பாடுகளிலும் தேசிய உணர்விலும் விடுதலை உணர்விலும்கட்டி வளர்க்கும் நோக்குடன் உன்னதமாகச் செயற்பட்டுவருபவர்கள். அவர்களை ஏன் சுட்டுக்கொன்றது என்றால்மாணவர் சமூகத்தை இக்கட்டான சூழலுக்குள் தள்ளுவதற்குத்
தான். எழுச்சி கொண்ட, அறிவுகொண்ட, ஆற்றல் கொண்டசமூகமாக தமிழ்ச் சமூகம் வளரக்கூடாது என்பதற்காக, வழிநடத்துகிற முதல்வரை ஆற்றலுள்ளவரை இந்தச் சமாதானகாலத்திலே, அதுவும் தமிழர் படை, தமிழர் தேசம் உயர்ந்துநிற்கிற நேரத்தில இண்டைக்கும் இதைச் சிறீலங்கா அரசாங்கம்
செய்துகொண்டுதான் இருக்கு எங்களுடைய விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்பட்ட நிலையில் சர்வதேசக் கவனத்தை ஈர்த்த நிலையில் இருக்கிறது
அவுஸ்ரேலியப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில்
தமிழீழத்திற்கு வந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப்பார்வையிட்டார். கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும், தேசகட்டுமானங்களையும் பார்வையிட்டார். அவர் அவுஸ்ரேலியப்பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது “நான் சுனாமியால்பாதிக்கப்பட்ட தமிழர் தேசப் பகுதிகளைப் பார்த்தேன்
விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தமிழர்களுடைய தாயகப் பகுதியையும் பாத்தேன் அவர்களுடைய தேசக் கட்டுமானங்களையும் பார்த்தேன் அத்தோடு தமிழீழத்தில் ஒரு நடைமுறை அரசு இயங்கிவாறதைப்
பார்த்தேன். தமிழ் மக்களுடைய தாயகத்தை, தன்னாட்சி உரிமையை சர்வதேசம் அங்கீகரிக்கவேணும் அல்லது தமிழர் தாயகத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்கவேணும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்
எங்கட உண்மை நிலையம் , எங்கட செயற்பாடுகளும், எங்கட உன்னதமான பக்கங்களும் சர்வதேசத்திற்கு புரிந்திருக்கிறது எங்களுடைய மாணவர்களையும், மக்களையும், கல்விச் சமூகத்தையும் அழிப்பதற்கும் ஆக்கிரமிப்பதற்கும் சிறீலங்கா பேரினவாத ஆட்சியாளர்கள், அவர்களுக்குச் சேவகம் செய்கின்ற கனவான்கள், அதன் பிரமுகர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுதமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வந்தனர்.
அவதூறுகளையும், பொய்ப் பிரச்சாரங்களையும் பரப்பி வந்தனர் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரிக்க முயன்றனர் . உண்மைக்கு புறம்பான பொய் பரப்புரையை மேற்கொண்டு தமிழ் மக்கள் மீது ஆக்கிரமிப்புயுத்தத்தை திணிைப்பதே அதன் முழு நோக்காக இருந்து வந்தது.
வெளிநாடுகளின் ஆயுத உதவியையும், பண உதவியையும்பெற்று  எமது பாடசாலைகள் மீதும் எமது வாழ்விடங்கள் மீதும் குண்டுகளைப் பொழிந்தது. சர்வதேச சமூகத்திடம், எமது மக்கள் தம்மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்காகவும் இழைக்கப்பட்ட  அநீதிகளுக்காகவும் குரல் எழுப்பினார்கள் எங்களுக்கொரு நீதியில்லையா, எங்களுக்கொரு நியாயம்
இல்லையா” என அவர்கள் கேட்டார்கள்உணரமாட்டீர்களா எங்களை பார்க்க மாட்டீர்களா” என கத்திக்  கத்திக் கேட்டார்கள். உலகத்திலிருக்கிற எந்த மனித நேய அமைப்புக்களும் செவிமடுக்கவி இந்த நேரத்தில், எங்களுடைய தேசத்தின் மீது யார் அவலத்தை விதைத்தானோ அவனுக்கே அந்த அவலத்தை திருப்பிக்
கொடுத்தோம். எதிரியின்ர முதுகெலும்பை நாங்கள் உடைத்தோம். எங்களுடைய போரிடும் சக்திக்கூடாகவே சர்வதேசம் எங்களைத் திரும்பிப் பார்த்தது. எங்களுடைய நிலைப்பாட்டைத் திரும்பிப் பார்த்தது. பலம் கொண்ட சக்தியாக நிமிர்ந்து நின்ற பொழுதுதான் சர்வதேசம் தலையிடும் சக்தியாகமாறியது. இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி வேர்கள் .கொம் சர்வதேச சமூகத்துக்கும்எங்களுக்குமிடையில் ஒரு உறவுநிலை வளர்ந்தது.
விடுதலைப்போராட்டத்தினுடைய பிரதிநிதிகள், வெளிநாடுகளுக்கு வந்ததும்
எமது பிரச்சனையை எடுத்துச் சொன்னதும் இதன் அடிப்படையில்
தான். அங்கிருந்தும் பலர் வந்தார்கள் யதார்த்தத்தைப்புரிந்துக்கொண்டார்கள்.
இவ்வளவு மாவீரர்கள் ஏன் மடிந்தார்கள் தலைவர் பிரபாகரன் ஏன் இந்த விடுதலைப் போரை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறார். போன்ற விடய
அவர்கள் உணரத்தொடங்கினார்கள். சிறீலங்கா அரசாங்கத்தின் சதி முயல்வுகள் அம்பலமாகத் தொடங்கினை சிறீலங்கா அரசாங்கத்தின் பேரினவாத முகத்திரையை எமது செயற்பாடுகளும், எமது போராட்டமுமே கிழித்துக்காட்டினை இந்த நிலையில் இன்றும் சர்வதேச ரீதியாக எம் மீது பயங்கரவாதமுத்திரையைகுத்தும்நோக்கில்அவர்கள்செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்
சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட பிரச்சாரத்துக்கான காரணிகளை அவர்கள் தேடுகிறார்கள் . அப்படியான காரணிகள் இல்லாத போது பொய்யான குற்றச்சாட்டுக்கை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒன்றுதான்இ ந்த சிறார்கள் பிரச்சனையும்.தோல்வியைத தழுவும்  சிங்களதேசத்தின் ஆற்றாமையின் வெளிப்பாடும்தான் இது .


கேள்வி :சமர்க் களங்களை, கல்வி நிலையில் எவ்வாறு பதிவாக மேற்கொள்கிறீர்கள்?
 
கீதன் : சண்டைக்களங்களில் நின்று செயற்படும் பொழுது கூட பலதரபட்ட
வகுப்புகள்  நடைபெற்றுக்கொண்டிருக்கும். சண்டைக் களங்களில்பதுங்கு
அகழிகளுக்குள்  இருந்து நூல்களை வாசித்துக்கொண்டிருப்போம்.
ஒரு மகிழ்ச்சியான சூழலில் இருப்பதை போன்றே நாம் அங்கும் இருப்போம்.
புளியங்குளத்தில் நடந்தது எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு. ஒரு போராளி காவலுக்கு நிற்க ஏனைய போராளிகள் பதுங்கு அகழிகளுக்குள் இருந்து
புத்தகங்களை வாசிப்போம். கடந்த கால வரலாறுகளை பற்றி போராட்ட  வரலாறுகளை பறறி, தலைவரைப் பற்றி விடுதலையைப் பற்றி நாங்கள் படித்துக்கொண்டிருப்போம் அல்லது இதில் ஆற்றல் மிக்க போராளி ஒருவர்
வகுப்பெடுத்துக்கொண்டிருப்பார். பத்திரிகைகள் படித்துக்கொண்டிருப்போம். எங்களுக்கென வரும் துண்டு பிரசுரங்களை வாசிப்போம். வானொலி கேட்போம்
எமது பணிகளில் முக்கியமானது, ஒரு சமர்நடந்துகொண்டிருக்கிறது என்றால் அச்சமர் பற்றிய முழு விபரங்களையும் பதிவாக்குவது எதிரி எப்படி முன்னேறுகிறான், எத்தனை படை வீரர்களோடு எத்தனை மணிக்கு முன்னேறுகிறான், என்னென்ன படைக் கலங்களோடு முன்னேறுகிறான், எந்தளவிற்கு உச்சமான தாக்குதலை அவன் தொடுக்க முனைகிறான் என எதிரி பற்றிய முழு விபரங்களையும் நாங்கள் துல்லியமாக பதிவோம் அன்றைய நாளின் அவனது முழு நடவடிக்கைகளையும் நாம் பதிவுககுளுக்குள்ளாக்குவோம்  எங்களுடைய போராளிகள் எவ்வாறு இயங்குகிறார்கள் என்பது பற்றி அவர்களுடைய அர்ப்பணிப்புக்கள் அவர்களுடைய தியாகங்கள் பற்றி பதிவோம். புளியங்குளத்தில் போராளிகள்
சொல்லிக்கொண்டிருப்பார்கள் “நாங்கள் உயிரோடு இருக்கும் வரையும் புளியங்குளத்தை நெருங்கேலாது. எதிரி பிடிக்கிறது என்று சொன்னால் எங்கட உடலைத்தாண்டித்தான் போய் பிடிக்கலாமே ஒழிய மற்றும்படி நடக்காது” புளியங்குளத்தில ஒரு போராளி கண்களில் காயப்பட்டுவிடுகிறார். கண்களில் இரத்தம் வழிகிறது. அவர் இரண்டு கண்களும் பார்வையை இழந்துபோன
சமயத்திலும், அய்யோ எனக்கு கண் தெரியவில்லை என்று
கதறவில்லை . தனது “ஆயுதம் எங்கே” என்று கேட்டதைத்தான்
எங்களால் கேட்க்க  முடிந்தது. அவரின் அழுகையை அவர் அந்த  நேரத்திலும் வெளிப்படுத்தவில்லை . அவ்வளவு உறுதியும்உரமும் மிக்க போராளியாக எம்முன் நின்றார். எமது மக்களின்விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் அவர்கள் தங்கள் உயிரை  துச்சம் என மதித்து நிற்கும் பண்புகளையும் பதிவாக்குவோம் பிறகு அந்த சமர் பற்றி போராளிகளுக்கு கற்பிப்போம். எமது
பணிகள் எல்லாவற்றையும் இவ்விடத்தில் பகிர்ந்துகொள்ளமுடியாதிருக்கிறது



கேள்வி :சமூக விடுதலைக்கான கல்வியும் கற்பிக்கப்படுகிறதா?
 
கீதன்: மானிட வாழ்க்கை  என்பது குடியியல் வாழ்க்கையையும்அரசியல் வாழ்க்கையையும் கொண்டது. குடியியல் வாழ்க்கை என்றால் ஒரு மனிதன் ஒரு வீட்டைக் கட்டி நாளாந்தம் தன்சீவியத்தை தனது வாழ்க்கையை வாழ்ந்துகொள்வதாக சொல்லலாம்.
அரசியல் வாழ்க்கை என்றால் எங்கட இடத்தில நாங்கள் வாழவேண்டும். எங்கட மொழியைப் பேசவேண்டும். எங்கட- கலைபண்பாட்டை நாங்கள் பின்பற்றவேண்டும். எங்கட கலைபண்பாட்டுக்கேற்ற மாதிரி நாங்கள் வாழவேண்டும். எங்கட வரலாற்றை நாங்கள் படிக்கவேண்டும். எங்கட
வரலாற்றுக்கேற்றமாதிரி எங்கட வாழ்க்கையை நடத்தவேண்டும்.
எங்கட பொருளாதார பலத்தில் நாங்கள் நிமிர்ந்து நிற்கவேண்டும்
இதுதான் எங்கட அடிப்படை அரசியல் உரிமைகள். இப்படி ஒரு வாழ்கையை ஒரு காலத்தில நாங்கள் வாழ்ந்தோம் .
எஙங்கட  சமூகமும் சிறப்புற இருந்தது. யாருக்கும் அடிமைப்படாத
வாழ்க்கையை வாழ்ந்தது அனால்  ஒரு கால கட்டத்துள்  சாதியம் , சமயம், சீதனம்பிரதேசவாதம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகள் என
எல்லாம்  புகுநது எமது சமூகததை சிதைததது அதனால் ஒரு கட்டத்தில்எங்கட மக்களுக்குள்  ஏற்பட்ட உடைவுகளாலும் பிரிவுகளாலும் நாங்கள் பின்தங்கிபோக நேர்ந்தது.
இதன் காரணமாகவும்தான் நாம் எமது அரசியல் உரிமைகளையும் இழக்க நேரிட்டது. தமிழர்கள் வீரமுள்ளவர்களாக இருந்தார்கள். தமிழர்கள்அறிவுள்ளவர்களா இருந்தார்கள் உலகத்தில்  ஒரு இனம் எப்படி வாழக்கூடாதோ அப்படி வாழ்ந்தோம். உலகத்தில் ஒரு இனம் எப்படி
சாகடிக்கப்படக்கூடாதோ அப்படி சாகடிக்கப்பட்டோம் அடிமைப்பட்ட மக்களாய் போனோம். மற்றவர்களால் சுரண்டப்பட்டோம். அப்போ எங்களுக்கொரு தலைவர் இருக்கவில்லை எங்களுக்கொரு படை பலமும் இருக்கவில்லை
தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ் மக்களின்விடுதலைக்கான போராட்டத்தை  முன்னெடுத்தார். தேசியஉணர்வை கட்டி எழுப்பினார். அவரே மக்களின் விடுதலைக்கா மக்கள் படையைக் கடடி எழுப்பினார் சமூக விடுதலையையும் அரசியல் விடுதலையையும் ஒரு சேர
இணைத்தே இந்தப் போராட்டத்தை  தலைவர் வழி நடத்திச்
செல்கிறார் . இவை பற்றியும்  போராளிகளுக்கு விரிவாக கற்பிப்போம்.


பேட்டி கண்டவர் : சுபாஸ் 
இதழ் வெளியீடு :எரிமலை இதழ் 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”