கோட்டாவுடன் பேச்சுவார்த்தைகோரும்அமைப்பிற்கும் நோர்வே ஈழத்தமிழர் அவைக்கும்எவ்விததொடர்பும் இல்லை

breaking

தமிழர்களின்   விடுதலை தீர்வுக்கு  இனப்படுகொலையாளி கோட்டபாயவுடன் பேச்சுவார்த்தை என்கின்ற  சூழ்ச்சிவலையில்  பயணிக்கும் அமைப்பிற்கும்   நோர்வே ஈழத்தமிழர் அவைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை  மேலும்  நோர்வே ஈழத்தமிழர் அவையின் அனுமதியின்றி இவ்வாறான இன நலன் பேணாச் செய்திகள் பொதுவெளியில் பரப்பப்படுவதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று   நோர்வே ஈழத்தமிழர் அவையினர் அறிக்கை  ஒன்றை நேற்றுவெளியீடுசெய்துள்ளனர்.


மேலும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது 

03 October 2021



உலகளாவிய புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அரசியல் தீர்வுக்கான சிறிலங்கா அரசுடனான பேச்சுவார்த்தையில் சர்வதேச மத்தியஸ்தத்தைக் கோருகின்றனர்.
இவ்வாறு 8 தமிழ் அமைப்புகளின் இலச்சினையோடு ஊடகங்களில் உலாவரும் செய்தியில் நோர்வே ஈழத்தமிழர் அவையும் இணைந்திருப்பதாக குறிப்பிட்டிருப்பது எமது செயற்பாட்டு விதிமுறைகளுக்கு முரணாக அமைகின்றது.
எமது அமைப்பின் அனுமதியின்றி வெளியிடப்பட்டிருக்கும் இச் செய்திக்கும் எமக்கும் எவ்வித நிர்வாக தொடர்பும் இல்லை என்பதை நோர்வே ஈழத்தமிழர் அவையினராகிய நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்துடன், நோர்வே ஈழத்தமிழர் அவையின் அனுமதியின்றி இவ்வாறான இன நலன் பேணாச் செய்திகள் பொதுவெளியில் பரப்பப்படுவதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
நோர்வே ஈழத்தமிழர் அவை