யாழில் முஸ்லிம் இளைஞர் கைது.!

breaking
வட தமிழீழம் ,யாழ்.மாவட்ட செயலக சூழலில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய முஸ்லிம் இளைஞர்  ஒருவரை இன்று(செவ்வாய்கிழமை) நண்பகல் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாவட்ட செயலக சூழலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஓர் இளைஞன் நடமாடியுள்ளார். குறித்த இளைஞர் மாவட்ட செயலக சூழலில் பல தடவைகள் அங்கும் இங்குமாக திரிந்துள்ளார். அவ்வாறு நீண்டநேரமாக நடமாடிய இளைஞரை  கண்ட சிலர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சிங்கள பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மாவட்ட செயலகத்துக்கு வந்த இளைஞனை மடக்கி பிடித்தனர். இதனைத் தொடர்ந்து பொலிஸார் குறித்த இளைஞரை விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணான தகல்களை வழங்கியமையினால் மேலதிக விசாரணைகளுக்காக அவரை கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர், டுமல சூரிய பொலிஸ் பிரிவில் வசிக்கும் இளைஞன் என இனம் காணப்பட்டுள்ளார். தாம் யாழ்ப்பாணத்துக்கு மாலைகள் விற்பனை செய்யவே வருகைதந்ததாக தெரிவித்ததாக பொலிசார் தெரிவித்தனர். இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.