பிரான்சில் இடம்பெற்ற கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்ட மற்றும் துடுப்பெடுத்தாட்ட போட்டிகள்!

breaking
பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவுடன் பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு நடாத்திய கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் நினைவாக உதைபந்தாட்டப்போட்டி பிரான்சின் 95 மாவட்டத்தில் சார்சல் பிரதேசத்திலும் துடுப்பெடுத்தாட்ட போட்டி  கிறித்தல் பகுதியிலும் கடந்த 19.05.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வுகளில், சார்சல்பகுதியில் ஈகைச்சுடரினை 1997 அன்று உயிலங்குளம் பகுதியில் வீரச்சாவடைந்த 2ஆம் லெப். இளந்தேவன் அவர்களின் சகோதரன் அவர்கள் ஏற்றிவைத்தார். கிறித்தல் பகுதியில் ஈகைச்சுடரினை 26.132.2007 அன்று நெடுந்தீவு கடற்சமரில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி மேஜர் ஈழவீரனின் சகோதரன் ஏற்றிவைத்தார். அகவணக்கம் செலுத்தப்பட்டு விளையாட்டு வீரர்களுக்கும் அனைவருக்கும் மேஜர் காந்தரூபன் என்பவர் யார் என்பதையும் தமிழீழ தேசத்திலே பெற்றோரை இழந்து அநாதை என்றும் மற்றவர்களின் பரிதாபத்துக்கும் தான் வாழ்ந்தது போன்று, இனி தமிழீழ தேசத்திலே ஓர் அநாதைகள் என்ற சொற்பதம் இருக்கவோ, அப்படிப்பட்டவர்கள் இருந்தால் அவர்களை பொறுப்பெடுத்து தாயாகவும், தந்தையாகவும் தமிழீழ தேசியத்தலைவர் இருக்கவேண்டும் அதுவே தனது வெற்றியைத் தரப்போகும் தாக்குதலின் தலைவரிடம் கேட்கும் ஒரேயொரு வேண்டுகோள் என்று வரலாறு படைத்தவன் தான் மேஜர் காந்தரூபன் என்றும் அவனுடைய பெயரில்தான் உருவானது காந்தரூபன் அறிவுச்சோலை என்று அதில் கல்வி கற்றவர்கள் இன்று பலர் வைத்தியர்களாகவும், வக்கீல்களாகவும், உயர் கல்விமான்களாகவும் பணியாற்றி வருகின்றனர். அவர்களுடைய நினைவாகவே இந்த உதைபந்தாட்டப்போட்டி நடைபெறுகின்றது. எனவே அதன் மகிமை உணர்ந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பண்பையும் விளையாட்டு வீரனுக்குரிய பக்குவத்தையும் காட்ட வேண்டும் என்று கூறப்பட்டது. போட்டிகளை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மகேஸ், ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தலைவர் திரு. கிருபா, தமிழர் விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் திரு.கிருபா, பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்புப் பொறுப்பாள திருமதி சுகந்தினி, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா, தமிழ்ப் பெண்கள் அமைப்பின் உறுப்பினர்கள், சம்மேளன உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தனர். போட்டி முடிவுகள் வருமாறு:- உதைபந்தாட்டம் மேற்பிரிவு
  • முதலாம் இடம் -சென் பற்றிக்ஸ்
  • இரண்டாம் இடம்-பாடுமீ வி.க
  • மூன்றாம் இடம்-என் எஸ் பரிஸ் வி.க
  • சிறந்த விளையாட்டு வீரன்-தோமா
  • சிறந்த விளையாட்டு வீரன்-ஸ்ரேன்லே
  • தொடராட்ட நாயகன்-கொஷி
15 வயதின் கீழ்
  • 1ம் இடம்-யாழ்டன் வி.க இல. 21
  • 2ம் இடம்-ரோமியோ நவம்பர் வி.க
  • 3ம் இடம்-த.வி.க 93
  • சிறந்த விளையாட்டு வீரன்- மிதுலன் (யாழ்டன்)
  • சிறந்த விளையாட்டு வீரன்-றோமியோ நவம்பர் :மார்கஸ் அனோஷ்
  • இறுதியாட்ட நாயகன்-யாழ்டன் வி.க: வனுஷன்
13 வயதுப்பிரிவு
  • 1ம் இடம் -யாழ்டன் விளையாட்டுக்கழகம்
  • 2ம் இடம் -ஈஸ்ரன் விளையாட்டுக்கழகம்
  • 3ம் இடம்-வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகம்
  • சிறந்த விளையாட்டு வீரன்- ஆகாஸ் (ஈஸ்ரன் விளையாட்டுக்கழகம்)
  • சிறந்த விளையாட்டு வீரன்- ஜெகன் (யாழ்டன் விளையாட்டுக்கழகம்)
  • இறுதி ஆட்ட நாயகன்- அஸ்வின் (யாழ்டன் விளையாட்டுக்கழகம்)                                                

துடுப்பெடுத்தாட்டம்

  • 1ம் இடம் ஸ்கந்தா வி.க.
  • 2ம் இடம் எழிச்சி வி.க.
  • 3ம் இடம் பாரிஸ் சூப்பர் கிங்ஸ் வி.க.
  • சிறந்த பந்து வீச்சாளர் – துசியந்தன் (எழிச்சி வி.க.)
  • சிறந்த துடுப்பாட்ட வீரன் – ஜெனக்சன் (ஸ்கந்தா வி.க.)
  • சிறந்த தொடராட்ட வீரன் – சங்கர் (பி.எஸ்.கே. வி.க.)
  • இறுதியாட்ட நாயகன் – தஜி (ஸ்கந்தா வி.க.)